Skip to main content
SPM GPK விகிதத்தில் உயர்வு!

 

2021ஆம் ஆண்டிலிருந்து முதல் முறையாக மிகச் சிறந்த தேசிய சராசரி விகிதம் அதாவது GPKவைப் பதிவுச் செய்துள்ளன இந்த ஆண்டு SPM தேர்வு முடிவுகள்! 

 

அவ்விகிதம் 4.42 விழுக்காடு உயர்ந்துள்ளது. 

 

2024ஆம் ஆண்டு அவ்விகிதம் 4.49ஆகப் பதிவானது. 

 

இதனிடையே இவ்வாண்டு 13 ஆயிரத்து 779 மாணவர்கள் எல்லா பாடங்களிலும் A தேர்ச்சியைப் பெற்றுள்ளனர். 

 

376 மாணவர்கள் A+ பெற்றுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

----  

 

Kuala Lumpur அனைத்துலக விமான நிலையத்தில் ஐந்து வாகனங்களை மோதித் தள்ளி தப்பியோட முயன்ற கார் ஓட்டுனருக்கு, இதற்கு 31 குற்றப்பதிவுகள் இருந்துள்ளன! 

 

உள்ளூர்வாசியான அந்த 30 வயது மதிக்கத்தக்க ஆடவருக்கு போதை பொருள் தொடர்புடைய குற்றப் பின்னணியும் இருந்ததாகக் காவல் துறை தெரிவித்துள்ளது. 

 

காவல் துறையின் சோதனை நடவடிக்கையின் போது தப்பியோட முயன்ற அவருக்கு நீதிமன்றம் இன்று தடுப்பு ஆணை பிறப்பிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

 

----- 

  

நாட்டில் மின்னியல் கார்களுக்கான மாற்றம் இன்னமும் மந்தமாகவே இருக்கிறது! 

 

உலகச் சந்தை ஏற்ற இறக்கத்தால் எரிபொருள் விலை ஒரு சுமையாக இருந்தாலும், மின்னியல் காரின் அதிக விலையும் பலர் அவ்வகை கார்களுக்கு மாறாததற்கு ஒரு காரணமாக அமைவதாக, வணிக வல்லுனர்கள் கூறுகின்றனர். 

 

சாலை போக்குவரத்துத் துறையின் தகவல்படி, கடந்தாண்டு வரை நாட்டில் மூவாயிரத்து 600 EV கார்கள் மட்டுமே பதிவுச் செய்யப்பட்டுள்ளன. 

 

------  

 

அமெரிக்கா Texasசில் பள்ளியில் தனது ஆசிரியரை சுட்டுக் காயப்படுத்திய 15 வயது மாணவன் ஒருவன், பின்னர் தன்னை தானே சுட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

 

------  

 

மற்றொரு பக்கம் அர்ஜெண்டினாவில் 15 மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கிச் சுட்டு சம்பவத்தில் சக மாணவன் ஒருவன் உயிரிழந்த வேளை எண்மர் காயமடைந்தனர். 

RAAGA Aaha Siranta Isai!