Skip to main content
திடுக்கிடும் எரிபொருள் விலை!

 

 

மத்தியக்கிழக்கு நாடுகளில் நிலவி வரும் பதட்ட சூழலுக்கு மத்தியில், எரிபொருளின் விலையில் கடும் உயர்வு தென்படுகிறது! 

 

இன்று தொடங்கி அடுத்த ஒரு வாரத்திற்கு,ரோன்97 ரக பெட்ரோல் விலை 60 சென் உயர்ந்து லிட்டருக்கு 5 ரிங்கிட் 15 சென்னாக உள்ளது. 

 

உதவித் தொகை வழங்கப்படாத ரோன் 95 ரக பெட்ரோல் 60 சென் உயர்ந்து மூன்று ரிங்கிட் 87 சென்னுக்கு விற்கப்படும். 

 

உதவித் தொகை வழங்கப்பட்ட ரோன் 95 ரக பெட்ரோல் 1 ரிங்கிட் 99 சென்னாக நிலை நிறுத்தப்படுகிறது. 

 

டீசல் விலையோ 80 சென் உயர்ந்து, 5 ரிங்கிட் 52 சென்னாக உள்ளது. 

 

------ 

 

வாகனத்திற்கு வெளியே அல்லது தனிப்பட்ட கொள்கலனில் பெட்ரோல் அல்லது டீசலை பொதுமக்கள் வாங்கிவிட முடியாது! 

 

அதற்கு முதலில் அவர்கள் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீன அமைச்சின் கையிருப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் சிறப்பு பெர்மிட் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும். 

 

அந்த பெர்மிட் 20 லிட்டருக்கு மேற்பட்ட அளவுக்கு எண்ணெய் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும் என, அவ்வமைச்சின் அமுலாக்க தலைமை இயக்குனர் தெரிவித்தார். 

 

எரிபொருள் கசிவையும், அது தவறாகப் பயன்படுத்தப்படுவதையும்  தவிர்க்க, அந்த பெர்மிட் துணை புரிகிறது என்றார் அவர். 

 

----- 

 

கிளாந்தானில் நாட்டு எல்லை அருகே உள்ள 48 எண்ணெய் நிலையங்களில், எரிபொருள் கசிவு ஏற்படும் அபாயம் உள்ளது! 

 

சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக, உள்நாட்டு வாணிப வாழ்க்கைச் செலவீன துணை அமைச்சர் தெரிவித்தார். 

 

வணிகர்கள், எரிபொருளின் விலை ஆகியவை மட்டுமின்றி, அடிக்கடி எண்ணெய் நிரப்ப வரும் வாகனங்களும் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்றார் அவர். 

 

------  

 

மலாக்கா, Alor Gajahவில் வீடொன்றின் முன் புதைக்கப்பட்டிருந்த நான்கு மாத குழந்தையுடையது என நம்பப்படும் எலும்புக் கூடு ஒன்றைக் காவல் துறை கண்டுபிடித்துள்ளது. 

 

அச்சம்பவம் தொடர்பில் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் கைதாகியிருக்கின்றனர். 

 

-------  

 

பினாங்கில், Facebookகில் நபிகள் நாயகம் அவர்களை அவமதித்ததாக நம்பப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 

RAAGA Aaha Siranta Isai!