Skip to main content
தொழில்முனைவோருக்கான சிறப்புக் கடனுதவி: பெர்காட் தீபாவளி!

தீபாவளியை முன்னிட்டு BERKAT DEEPAVALI எனும் பெருநாள் கால கடனுதவித் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு!

இந்திய தொழில்முனைவோருக்காக 30 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அந்த கடனுதவியைப் பெறுவதற்கான விண்ணப்பம், நேற்று தொடங்கியது.

TEKUN Nasionalலின் கீழ் அறிமுகம் கண்டுள்ள அந்த கடனுதவித் திட்டத்திற்காக, அவர்கள் தலா முப்பதாயிரம் ரிங்கிட் வரை விண்ணப்பிக்கலாம் என KUSKOP அமைச்சர் Stevan Sim தெரிவித்தார்.

12 மாத காலத்திற்கு ஆண்டுக்கு மூன்று விழுக்காடு லாப விகிதத்தை அந்த கடனுதவி கொண்டிருக்கும்.

தீபாவளி கொண்டாட்ட காலகட்டத்தில் வணிகத்திற்கான பொருட்கள் கையிருப்பதை உறுதிச் செய்யவும், முன்பண நிதித்தேவைக்கும் அக்கடனுதவி துணை புரியும் என அமைச்சர் தெரிவித்தார்.

-----

நேப்பாள பெருவெள்ளத்தில் காணாமல் போன மலேசியர்களின் குடும்பங்களுக்கு உதவ வங்கிகள் முன்வந்துள்ளன.

மாதாந்திர வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஒத்தி வைக்கும் moratorium சலுகையை வழங்க Bank Negara இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்டு மாதம் நேப்பாள சீன எல்லையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் 54 மலேசியர்கள் காணாமல் போனதாகவும், அவர்களை இன்னும் தொடர்புக் கொள்ள முடியவில்லை என்றும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

-----

செப்பாங் அனைத்துலக பந்தையத்தளத்தில் நடைபெறும் Bahrain F1 GP பந்தையத்தை ஒட்டி, அப்பந்தையத்தளம் சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைப்புக்களின் ஒத்துழைப்பை நாடி வருகிறது!

அதன் மூலம் அங்கு போக்குவரத்துச் சேவை மற்றும் கூட்டத்தை நிர்வகிக்கும் விவகாரங்கள் சரியாகக் கையாளப்படுவது உறுதிச் செய்யப்படும் என SIC கூறியது.

முன்னதாக அப்பந்தையத்தளத்தின் வாயிலில் நெரிசல் அதிகமாகியிருப்பதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டன.

-----

ஜகார்த்தாவில் கடந்த ஜூலை மாதம், போதை பொருள் கடத்தல் விவகாரம் தொடர்பில் கைதான விமானியின் தடுப்புக் காவலை, இந்தோனேசிய அதிகாரிகள் மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளதாக புக்கிட் ஆமான் தெரிவித்தது.

-----

கிளாந்தான், Bachokகில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஐந்து தெருநாய்கள் தாக்கியதில், எட்டு வயது சிறவன் ஒருவன் தலையிலும் கழுத்திலும் காயத்திற்கு ஆளானான்.

 

RAAGA Aaha Siranta Isai!