
கட்டுமானம், விவசாயம், p-hailing போன்ற துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, நீண்டகால வெப்ப அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது !
தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஒன்று அவ்வாறு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வேலை நிறுத்தப்பட்டால், சம்பளக் குறைப்பு விதிக்கப்படுவதாகவும், அதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதாகவும் அந்த கூட்டமைப்பு விளக்கியுள்ளது.
எனவே, கடுமையான வெப்பத்தை தொழில்சார் அபாயமாக அரசு அங்கீகரித்து, வேலை நிறுத்தங்களுக்கு இழப்பீடு வழங்கும் சட்டத்தை கொண்டு வர வேண்டும் என அது வலியுறுத்தியது.
நாட்டில் தற்போது பல இடங்களில் கடுமையான வெப்பம் பதிவாகி வரும் நிலையில், அது அந்த விஷயம் குறித்து பேசியது.
----------
இதனிடையே, வெப்ப காலமாக இருப்பதை அடுத்து, தேசிய நீர் சேவை ஆணையம், மலேசியர்களை குளிக்கும் நேரத்தை பாதியாகக் குறைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது !
சுங்கை மூடா போன்ற முக்கிய நீர்வளங்கள் ஆபத்தான அளவுக்கு குறைந்து காணப்படுவதாக, அவ்வாணையம் தெரிவித்துள்ளது.
ஆனால், நீர் பயன்பாட்டை குறைப்பது அவசியம் என்றாலும், உடல் நீர்ச்சத்து குறையாமல், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிக முக்கியம் எனவும் அது சொன்னது.
----------
இவ்வேளையில், நாட்டில் 6 பகுதிகளில் இரண்டாம் கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
கெடாவில் 4 பகுதிகள், Hulu பேராக், மற்றும் ஒட்டுமொத்த பெர்லி்ஸ் ஆகியவையே, அந்த பகுதிகளாகும்.
அப்பகுதிகளில், தொடர்ந்து 3 நாட்களுக்கு, 37 முதல் 40 பாகை செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
---------
BUDI95 திட்டத்தில் ஏற்படும் மாற்றத்தை, உள்துறை அமைச்சு தற்காத்து பேசியுள்ளது !
அதன் ஒதுக்கீடு மாற்றப்பட்டாலும், உதவித்தொகை பெற்ற எரிபொருள் விலை லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 சென்னாக தான் இருக்கும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனால், மலேசியா உலகளவில் எரிபொருள் விலை மிகக் குறைவாக உள்ள நாடுகளில் ஒன்றாக உள்ளது.
----------
உறுதியான உத்தரவாதமில்லாத சமாதான ஒப்பந்தங்கள், Gaza, Lebanon போன்ற இடங்களில் வன்முறைச் சுழற்சியை, மீண்டும் உருவாக்கும் அபாயம் உள்ளது என, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim எச்சரித்துள்ளார் !