
வெப்ப கால சூழ்நிலையைச் சமாளிக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும்படி, அனைத்து கல்வி நிறுவனங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன !
திங்கட்கிழமை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதை அடுத்து, கல்வியமைச்சு அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
வெப்பம் 35 பாகை செல்சியசை மீறினால், வெளிப்புற நடவடிக்கைகளை ஒத்திவைப்பது, மாணவர்கள் அதிக வெப்பத்துக்கு ஆளாகக்கூடிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சு கூறியது.
மாணவர்கள் பள்ளிக்கு, விளையாட்டு உடைகளில் வருவது குறித்தும், பள்ளி நிர்வாகங்கள் பரிசீலிக்க வேண்டும் எனவும் அது சொன்னது.
---------
இதனிடையே, கெடாவில் மூன்று பகுதிகளில் இரண்டாம் கட்ட வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது !
Pokok Sena, Pendang மற்றும் Baling-கில், வெப்பம், தொடர்ந்து 3 நாட்களுக்கு 37 முதல் 40 பாகை செல்சியசாக இருக்குமென, மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது !
-------
87 kes kebakaran terbuka di Pahang dalam tempoh seminggu*last line translation
இவ்வேளையில், பஹாங்கில் இம்மாதம் 18-ஆம் தேதி முதல் நேற்று வரை, 87 திறந்தவெளி தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக மாநில தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது !
ஒரு நாளைக்கு சராசரியாக 12 புல்வெளி மற்றும் லாலாங் புல் பகுதிகளில் தீ விபத்துகள் பதிவாகின.
---------
Malaysia’s private hospitals report no disruption to medicine supply despite West Asia war, says APHM
மேற்காசிய நாடுகளில் மோதல்கள் நிலவி வந்தாலும், நாட்டின் தனியார் மருத்துவமனைகளில், மருந்து கையிருப்பு போதுமான அளவில் உள்ளது !
அம்மோதல்களால், மருந்து விநியோகத்தில் நேரடி பாதிப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த அறிகுறியும் இல்லை என, மலேசிய தனியார் மருத்துவமனைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
--------
MIC to remain in BN ‘for now’, coy on future with PN
ம.இ.கா. தற்போதைக்கு தேசிய முன்னணியிலேயே இருக்க முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார் !