
வெப்ப காலத்தில், வெளியில் நீண்ட நேரம் இருக்காமல் கவனமாக இருக்கும்படி, பொதுமக்கள் கேட்டுக்கொளப்பட்டுள்ளனர் !
அதுவே கட்டாயமாக வெப்ப பகுதிகளுக்குச் செல்லும் சூழல் நிலவினால், அதற்கேற்ற இலகுவான உடையை அணிந்து செல்லவும்.
அதே சமயம், தங்களை வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் குடை, நீர்புட்டி உள்ளிட்ட பொருட்களை, உடனோடு கொண்டு செல்வது அவசியம் என, மலேசிய வானிலை ஆய்வு மைய செயல்பாட்டுக் குழுவின் துணை தலைமை இயக்குநர், AMBUN DINDANG தெரிவித்துள்ளார்.
அதிகமான தண்ணீரை அருந்தும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்காலத்தில் திறந்தவெளி எரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை தவிர்த்துக்கொள்ளும்படியும், அவர் கேட்டுக்கொண்டார்.
ஏனெனில் சிறிய தீ கூட, பெரிய தீ விபத்துக்கு வழிவகுக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.
-------
2021-ஆம் ஆண்டிலிருந்து முதன் முறையாக, மிகச் சிறந்த தேசிய சராசரி தேர்ச்சி விகிதம், அதாவது GPK-வைப் பதிவுச் செய்துள்ளது, 2025 SPM தேர்வு !
அவ்விகிதம் 4.42 விழுக்காடு உயர்ந்துள்ளது.
2024-ஆம் ஆண்டு அவ்விகிதம் 4.49 ஆகப் பதிவானது.
குறைவான GPK விகிதம், சிறந்த அடைவுநிலையைக் குறிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வெழுதிய மாணவர்களில், 94 விழுக்காட்டினர் அல்லது, 3 லட்சத்து 66-ஆராயிரத்துக்கும் மேற்பட்டோர், SPM சான்றிதழைப் பெற தகுதிப் பெற்றுள்ளதாக, கல்வி தலைமை இயக்குநர் தெரிவித்தார்.
---------
நிரந்தர வருமானமில்லாத Gig தொழிலாளர்களுக்கான சட்டம், இன்று அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது !
இதன் வழி, நாடு முழுவதும் உள்ள சுமார் 1.6 மில்லியன் gig தொழிலாளர்களுக்கு, சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்படுவதாக, மனிதவள அமைச்சர் தெரிவித்துள்ளார்.
--------
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் மோதலுக்கு மத்தியிலும், மலேசியாவின் பொருளாதாரம், நடப்பாண்டில் 4 முதல் 5 விழுக்காடு வரை வளர்ச்சி அடையும் என, மலேசிய தேசிய வங்கி கணித்துள்ளது !
--------
இதனிடையே, மத்திய கிழக்கு பகுதியில் மோதல்கள் நீடித்தாலும், மலேசியாவின் சுற்றுலா துறை, அதன் சவால்களை எதிர்கொண்டு, மீண்டும் வளர்ச்சி அடையும் திறனை நிரூபித்து வருவதாக, சுற்றுலா கலை பண்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது !