
ஒன்பது ஆண்டுகள் கழித்து Liverpoolலிலிருந்து வெளியேறவிருக்கிறார் Mo Salah!
ஒப்பந்தம் அடுத்த ஆண்டு தான் முடிகிறது என்றாலும், அவரும் அணி நிர்வாகமும் அதனை முன்கூட்டியே முடித்துக் கொள்ள இணக்கம் கண்டிருப்பதாக Liverpool தெரிவித்துள்ளது.
Redsசுக்காக இதுவரை 435 ஆட்டங்களில் விளையாடி, 255 கோல்கள் போட்டுள்ள Salah, Redsசில் அதிக கோல் போட்ட மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெறுகிறார்.
------
MLS கிளப்பான Orlando Cityயில் இணைவதற்காக, இப்பருவ இறுதியோடு Atletico Madridடை விட்டு வெளியேறவிருக்கிறார் France தாக்குதல் நட்சத்திரம் Antoine Griezmann.
அவ்வணியில் அவர் ஈராண்டுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
-----
2027 சீ விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்த முழு வீச்சில் மலேசியா தயாராகி வருகிறது!
இன்னும் 600 நாட்களுக்கும் குறைவான காலமே எஞ்சியுள்ள நிலையில், ஆயத்த வேலைகள் 80 விழுக்காடு நிறைவடைந்திருப்பதாக இளைஞர் விளையாட்டு அமைச்சர் தெரிவித்தார்.