
ஜெர்மனி தேசிய காற்பந்து அணியின் கேப்டன் Joshua Kimmich, இப்பருவ உலகக் கிண்ணத்தில், தமதணி முன்னிலை போட்டியாளர்களில் ஒன்றாக இல்லை என தெரிவித்துள்ளார் !
கடந்த இரண்டு உலகக் கிண்ணங்களில் ஜெர்மனி, குழு சுற்றிலேயே வெளியேறியதால், உலகளாவிய தரவரிசையில் அவர்கள் பின்தங்கியுள்ளதை சுட்டிக்காட்டி, அந்த மத்தியதிடலாட்டக்காரர் அவ்வாறு சொன்னார்.
ரசிகர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க, ஜெர்மனி தங்கள் திறமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
-------
இப்பருவத்தோடு லிவர்பூலில் இருந்து வெளியேறும் Mohamed Salah, அடுத்து எந்த கிளப்பில் இணைவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லையாம் !
அவரின் பேச்சாளர் அதனை தெளிவுப்படுத்தியுள்ளார்.
அவர் அவ்வணியை விட்டு வெளியேறியவுடன், பல கிளப்புகள் அவரை வளைத்துப்போட அடிப்போடும் என்பது மறுப்பதற்கில்லை ; அதில் பெரிய ஐரோப்பிய கிளப்புகளும், சவுதி ப்ரோ லீக் அணிகளும் அடங்கும்.
---------
அடுத்த பருவ Champions லீக்குக்கு, Chelsea தகுதி பெறாவிட்டாலும் கூட, அதன் நிர்வாகி Liam Rosenior மீது அணி உரிமையாளர்கள் தொடர்ந்து நம்பிக்கை வைப்பார்கள் என தகவல்கள் கூறுகின்றன !
Chelsea, புள்ளிப்பட்டியலில் 6-ஆவது இடத்தில் உள்ளது ; முதல் 4 இடங்களைப் பிடிக்க அவ்வணி 6 புள்ளிகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது.
அவ்வணிக்கு, இன்னும் ஏழாட்டங்கள் எஞ்சியுள்ளன.
---------
ஆசிய காற்பந்து சம்மேளனம், JDT-க்கு எதிராக 24-ஆயிரத்து 172 ரிங்கிட் அபராதம் விதித்துள்ளது !
கடந்த மாதம், ஜப்பானிய கிளப் ஒன்றுடன் மோதிய ACL Elite ஆட்டத்தின் போது, JDT வீரர்களுக்கு, நடுவரால் ஆறு மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டதால், இந்த அபராதம் விதிக்கப்பட்டது.