
எகிப்திய நட்சத்திர வீரர் மோ சாலா, அமெரிக்க கிளப்பான MLS-சில் விளையாட வேண்டும் எனும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் அக்கிளப்பின் ஆணையர் !
சாலா, அமெரிக்காவில் விளையாடும் Lionel Messi, Thomas Muller போன்ற வீரர்களை தொடர்புகொண்டு, அவர்கள் அங்கு எவ்வளவு மகிழ்ச்சியாக விளையாடுகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம் என்றும் அவ்வாணையர் ஆலோசனை வழங்கினார்.
எனினும், தற்போதைக்கு எந்தவொரு அமெரிக்கக் கிளப்பும், சாலாவை ஒப்பந்தம் செய்ய தீவிரமாக முயற்சிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்பருவ இறுதியோடு லிவர்பூலை விட்டு வெளியேறும் சாலாவுக்கு, Saudi Pro League தான் ஏற்ற மாற்றுத் தளமாகக் கருதப்படுகிறது.
----------
லிவர்பூலில் இருந்து Arne Slot பணி நீக்கம் செய்யப்பட்டால், அவரிடத்திற்கு வர Real Madrid-டின் முன்னாள் தலைமை பயிற்றுநர் Xabi Alonso ஆர்வமாக உள்ளாராம் !
தனக்கான விண்ணப்பத்தைப் பொறுத்தே, தாம் பரிசீலிப்பேன் என அவர் சொன்னாராம்.
லிவர்பூல், இப்பருவம் செம்மையான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதால், Slot-டின் எதிர்காலம் நிலைத்தடுமாறிப் போயுள்ளது.
---------
Man United வீரர் Casemiro-வை ஒப்பந்தம் செய்ய Inter Miami-யும், LA Galaxy-யும் பரிசீலித்து வருகின்றன !
United-டுடனான அவரின் ஒப்பந்தம் இப்பருவத்தோடு முடிவடைகிறது.
---------
Brazil-லுக்கு எதிரான நாளைய அனைத்துலக நட்புமுறை காற்பந்தாட்டத்தில், France அணியின் கேப்டன் Kylian Mbappe விளையாடவுள்ளார் !
அண்மையில் காயப் பிரச்சனையில் இருந்து வந்த அவர், குணமடைந்துவிட்டார்.
Brazil - France மோதும் நட்புமுறை காற்பந்தாட்டத்தை, அதிகாலை 4 மணி தொடங்கி, Astro அலைவரிசை 810 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.