Skip to main content

Advertisement

சௌதியில் சிவராசா அனோஜனின் மரண தண்டனை ரத்து - அவரது தந்தை, இலங்கை அரசு கூறியது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
ANOJAN FACEBOOK

இலங்கையைச் சேர்ந்த சிவராசா அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை செளதி அரேபிய உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கை துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்ட தூதரக மற்றும் சட்டரீதியான முயற்சிகளின் விளைவாக இந்த முடிவு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக செளதி அரேபிய அரசாங்கம் வழங்கிய ஆதரவுக்கும், இலங்கைத் தூதர், வெளியுறவு அமைச்சகத்தின் செயலர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், இலங்கை மற்றும் செளதி அரேபிய சட்டக் குழுவினர் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் இதனைப் பதிவிட்டுள்ளார்.

அனோஜனுக்காக இலங்கை சார்பில் செளதி அரேபியாவுக்குச் சென்ற சட்டக் குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ஃபைசர் முஸ்தபா, செளதி அரேபிய மேல்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் விதித்திருந்த மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக பிபிசி சிங்கள சேவையிடம் தெரிவித்தார்.

தற்போது நீதிமன்றத் தீர்ப்பைத் தங்கள் குழுவினர் ஆய்வு செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

''மகனுக்கு மரண தண்டனை ரத்து செய்யப்பட்டமைக்கு கடவுளுக்குதான் நன்றி சொல்ல வேண்டும். உதவிய அனைவருக்கும் நன்றி" என அனோஜனின் தந்தை சிவராசா பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சிவராசா அனோஜன், சர்வதேச மன்னிப்புச் சபை, சௌதி அரேபியா, இலங்கை, மரண தண்டனை
SAUDI SRI LANKA EMBUSSY

அனோஜனுக்கு என்ன நடந்தது?

27 வயதான கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜன், வேலைக்காக 2025 செப்டம்பர் 4-ஆம் தேதி செளதி அரேபியாவுக்குச் சென்றார்.

சில மதங்களுக்கு முன்பு இலங்கையின் பிரபல முருகன் ஆலயமாக விளங்கும் கதிர்காமத்திற்கு, நாட்டின் வடக்கு பகுதியிலிருந்து குழுவொன்று பாத யாத்திரை சென்றிருந்தது.

இந்த பாத யாத்திரை குழுவுடன், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாய் ஒன்றையும், பாத யாத்திரையில் ஈடுபட்டவர்கள் அழைத்து சென்றிருந்தார்கள்.

கல்முனை பகுதி ஊடாக பாத யாத்திரை பயணித்துக் கொண்டிருந்த தருணத்தில், சுப்ரமணியம் என்றழைக்கப்படும் நாயின் மீது இஸ்லாமிய இளைஞர் ஒருவர் தாக்குதல் நடாத்தியிருந்தார்.

இந்த இளைஞன் நாயின் மீது தாக்குதல் நடாத்தும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டதை தொடர்ந்து, இந்த விடயம் நாட்டில் பாரிய பேசுப்பொருளாகியது.

இந்தநிலையில், குறித்த இளைஞன் மீது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி, போலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டன.

இவ்வாறு பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில், குறித்த முஸ்லிம் இளைஞன் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

நாயின் மீது தான் அறியாமல் தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்த இளைஞன், பொதுமக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பிலான விவாதம் சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக பேசுப் பொருளாகி, பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வந்திருந்தன.

இந்தநிலையில், ஜூலை 27-ஆம் தேதி, ஃபேஸ்புக்கில் அனோஜன் நபிகள் நாயகம் குறித்த வெளியிட்ட ஒரு கருத்து மதநிந்தனையாகக் கருதப்பட்டதைத் தொடர்ந்து, செளதி அரேபியக் காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

முதலில், அல்-அஹ்சா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அனோஜனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 30 லட்சம் செளதி ரியால் அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை அரசு
PMD SRI LANKA

இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள்

மரண தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சிவராசா அனோஜனின் குடும்பத்தினர், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவை சந்தித்து தங்களது மகனை மீட்க கோரிக்கை வைத்தனர்

அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்துசெய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தான் எடுப்பதாக ஜனாதிபதி, இதன்போது உறுதி வழங்கியிருந்தார்.

இதன்படி, இலங்கை சட்ட வல்லுநர்கள் அடங்கிய குழுவொன்றை கடந்த வாரம் சௌதி அரேபியாவிற்கு அனுப்பிய இலங்கை அரசாங்கம், அங்குள்ள சட்ட வல்லுநர்களுடன் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கான மேன்முறையீட்டு மனுவை தயாரித்திருந்தது.

இந்த மேன்முறையீட்டு மனு நேற்று முன்தினம் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நேற்றைய தினம் அனோஜனுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

- கூடுதல் தகவல் பிபிசி சிங்கள சேவை

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!