சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் அனிருத் ரவிச்சந்தர் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று (நவம்பர் 21) நடைபெறுகிறது.
இவர்களது திருமணம் கடந்த நவம்பர் 11ஆம் தேதி கிரீஸ் நாட்டில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள், தொழில்துறை, திரைத்துறை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் கலந்து கொண்டனர். பிரதமர் மோதியும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வாழ்த்துக் கடிதம் அனுப்பியிருந்தனர்.
குடியரசுத் துணைத்தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முதலமைச்சர் விஜய், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக, அதிமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வருகை தந்திருந்தனர்.
முதலமைச்சர் விஜயின் தாயார் ஷோபா சந்திரசேகரும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு