Skip to main content

Advertisement

மமதா பானர்ஜி மீது 'தாக்குதல்' நடத்த முயற்சி - காவல்துறை கூறியது என்ன?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி மீது பெண் தாக்குதல் நடத்த முயன்றதாகப் புகார்
ANI

மேற்கு வங்க முன்னாள் முதலமைச்சர் மமதா பானர்ஜி மீது பெண் சிவில் தன்னார்வலர் ஒருவர் தாக்குதல் நடத்த முயன்றதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மமதா பானர்ஜி தனது காளிகாட் இல்லத்துக்கு அருகே பூஜை நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கி வைப்பதற்காகச் சென்றுகொண்டிருந்தபோது, தனிஷ்டா சாஹா (38) என்ற பெண் அவரைத் தாக்க முயன்றதாகத் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் டோலா சென் தெரிவித்துள்ளார்.

திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அந்தப் பெண்ணைக் காவல்துறையினரிடம் ஒப்படைத்து, காளிகாட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்தப் புகாரின்படி, அந்த பெண் மமதா பானர்ஜியைத் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கத்தியால் தாக்கவும் முயன்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண் மது போதையில் இருந்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் பிரிவினர் அளித்த புகாரை காவல்துறையினர் உறுதிப்படுத்தினர். எனினும், அந்தப் பெண்ணிடம் ஆயுதம் எதுவும் கண்டெடுக்கப்படவில்லை என்று தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் சிவில் தன்னார்வலர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மமதா பானர்ஜிக்கு வழங்கப்பட்டுள்ள இசட்-பிளஸ் பாதுகாப்பை மீறி இந்த தாக்குதல் முயற்சி நடந்ததாக திரிணாமூல் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் பிரிவினர் அளித்த புகாரில், தாக்குதல் நடத்த முயன்ற பெண்ணின் பெயர் தனிஷ்டா சாஹா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், காவல்துறையினர் அவரது பெயரை அனுஷா சாஹா என்று தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா காவல் ஆணையர் அஜய் நந்தா, "சம்பவ இடத்திலிருந்து ஒரு பெண் காவலில் எடுக்கப்பட்டுள்ளார். ஆரம்பகட்டத் தகவல்களின்படி, அவரது மனநிலை முழுமையாகச் சீராக இல்லை என்று தெரிகிறது. அவர் எதற்காக இந்தச் செயலில் ஈடுபட்டார் என்பதைக் கண்டறிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார்.

இதற்கு முன்னதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே, '’போதைப் பழக்கத்துக்கு அடிமையான ஒரு பெண் மமதா பானர்ஜியின் வீட்டுக்கு வந்து, கத்தியால் தாக்க முயன்றதாக’’ சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

கோகலே தனது பதிவில், "மேற்கு வங்கத்தில் நிலவும் சூழல் கவலைக்குரியது. இசட்-பிளஸ் பாதுகாப்பு கொண்ட, மூன்று முறை முதலமைச்சராக இருந்த தலைவருக்குக்கூடப் பாதுகாப்பு இல்லை. டெல்லியில் பாஜகவை எதிர்கொள்ள மமதா உறுதியுடன் இருப்பதால், இது திட்டமிட்ட சதியா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காவல்துறை புகாரின் நகலையும் அவர் பகிர்ந்திருந்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!