Skip to main content

Advertisement

ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை: பாகிஸ்தானிடம் இந்தியாவின் தோல்வியைவிட அதிகம் பேசப்பட்ட போட்டியின் பதற்றமான தருணங்கள்

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
இந்தப் போட்டியில் திலக் வர்மா சதமடித்தாலும், அவரது ஆட்டம் மிகவும் மெதுவாக அமைந்தது (கோப்புப்படம்).
Sanka VIDANAGAMA / AFP via Getty Images
இந்தப் போட்டியில் திலக் வர்மா சதமடித்தாலும், அவரது ஆட்டம் மிகவும் மெதுவாக அமைந்தது (கோப்புப்படம்).

2026 ரைஸிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா ஏ அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் ஏ அணி வீழ்த்தியது.

ஞாயிற்றுக்கிழமை தோஹாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 313 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தப் போட்டி குறித்து சமூக ஊடகங்களில் பலரும் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

போட்டியின்போது பேசுபொருளான மற்றொரு நிகழ்வு, டாஸ் போடும்போது பாகிஸ்தான் ஏ அணியின் கேப்டன் அப்துல் சமதும் இந்தியா ஏ அணியின் கேப்டன் திலக் வர்மாவும் கைகுலுக்கிக் கொள்ளாதது.

வெற்றிக்குப் பிறகு ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் பாகிஸ்தான் அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். சில வீரர்கள் மைதானத்தின் தரையை முத்தமிட்டதுடன், அணியினர் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

போட்டி முடிந்த பிறகும் இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. போட்டியின் பல்வேறு தருணங்களில் வீரர்களின் இந்த நடத்தையைப் பற்றியும் பலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ஹசன் நவாஸ் 79 ரன்கள் எடுத்தார். முவாஸ் சாதகத் 59 ரன்களும், ஃபர்ஹான் யூசுப் 56 ரன்களும் எடுத்தனர்.

இந்தப் போட்டியில் திலக் வர்மா சதமடித்தாலும், அவரது ஆட்டம் மிகவும் மெதுவாக அமைந்தது (கோப்புப்படம்).
ACC
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதம் அப்போது பெரும் விவாதத்துக்கு உள்ளானது (கோப்புப்படம்)

இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் ஹர்ஷித் ராணா அதிக ரன்களை விட்டுக்கொடுத்தார். 10 ஓவர்களில் அவர் 77 ரன்களைக் கொடுத்தார். போட்டியின்போது பலமுறை அவர் பொறுமையிழந்து காணப்பட்டார்.

இந்திய அணியில் ஹர்ஷித் ராணா, பிரின்ஸ் யாதவ், சூர்யான்ஷ், விப்ராஜ் நிகம் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

314 ரன்கள் என்ற கடினமான இலக்குடன் இந்திய அணி பேட்டிங் செய்யத் தொடங்கியது. தொடக்கத்தில் இந்திய அணி ஓரளவுக்கு நன்றாக விளையாடியதால், அந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்பினர்.

ஆனால், வைபவ் சூர்யவன்ஷி 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. ஆயுஷும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

இதையடுத்து அபிஷேக் சர்மாவும் கேப்டன் திலக் வர்மாவும் இணைந்து ஆட்டத்தைச் சீராக்கினர். அபிஷேக் சர்மா 42 பந்துகளில் 70 ரன்கள் எடுத்தார்.

திலக் வர்மா இந்தப் போட்டியில் சதம் அடித்தபோதிலும், 100 ரன்களை எடுக்க அவர் 149 பந்துகளைச் சந்தித்தார். அவரது இந்த மெதுவான ஆட்டம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்தது.

பாகிஸ்தான் அணியின் அலி ராசா, ஹசன் நவாஸ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இந்திய அணி 49.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதாவது, கிட்டத்தட்ட முழு ஓவர்களையும் விளையாடியபோதும், பாகிஸ்தான் அணியின் ஸ்கோரை நெருங்கக்கூட இந்திய அணியால் முடியவில்லை.

பல தருணங்களில் வெளிப்பட்ட பதற்றம்

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்ற பிறகு இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதம் அப்போது பெரும் விவாதத்துக்கு உள்ளானது
ACC
19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதம் குறித்து பலரும் கருத்து தெரிவித்தனர் (கோப்புப்படம்).

இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டிகளில் வழக்கமாகக் காணப்படும் பதற்றம், இந்தப் போட்டியிலும் பல தருணங்களில் வெளிப்பட்டது.

'இந்தியன் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்' என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் பக்கம் ஒன்று, "43-வது ஓவரில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர் அலி ராசா பந்துவீச வந்தபோது, நடுவரிடம் தெரிவிக்காமல் திலக் வர்மா நின்றுக்கொண்டிருந்த முனையில் இருந்து பந்துவீசினார். இதையடுத்து நடுவர் உடனடியாக அந்தப் பந்தை 'டெட் பால்' என அறிவித்தார். இந்த முடிவு குறித்து அலி ராசாவும் பாகிஸ்தான் கேப்டன் சமதும் நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்" என்று பதிவிட்டது.

"ஆனால், அந்தப் பந்து 'டெட் பால்' என்றே கணக்கில் கொள்ளப்படும் என்று நடுவர் தெளிவுபடுத்தினார். அலி ராசா தொடர்ந்து வாதிட்டதுடன், அதை 'டாட் பால்' எனக் கணக்கிட வேண்டும் என்றும் கோரினார். சிறிது நேரம் இந்த விவாதம் நீடித்தது. இறுதியில், நடுவரின் முடிவை ஏற்றுக்கொண்டு ஆட்டத்தை மீண்டும் தொடங்குவதைத் தவிர பாகிஸ்தான் அணிக்கு வேறு வழியிருக்கவில்லை" என்றும் அந்தப் பதிவு குறிப்பிட்டது.

வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்

வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்
Ashley Allen-ICC/ICC via Getty Images

'பிசிடி ஜியோ நியூஸ்' என்ற பெயரில் இயங்கும் எக்ஸ் பக்கம், பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்தது. அந்தப் பதிவில், "19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணி நடந்துகொண்ட விதத்துக்குப் பதிலளிக்கும் வகையில் நீங்கள் கொண்டாடிய விதம் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் அணிக்கு வாழ்த்துகள். வீரர்கள் சிறப்பாக விளையாடினர்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

பிஎஸ்ஜேடி என்ற பெயரில் பதிவிட்ட ஒருவர், "இந்திய அணியைப் போல பாகிஸ்தான் வீரர்கள் எதிரணியின் உடைமாற்றும் அறையை நோக்கி சைகை செய்யவில்லை. அவர்கள் மிகவும் கண்ணியமான முறையில் கொண்டாடினர்" என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதம் ஓமனில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதம் குறித்து சமூக ஊடகங்களில் பெரும் விவாதம் எழுந்தது.

இந்திய அணி வீரர்களுக்கு சிலர் ஆதரவு தெரிவித்தனர். அதேவேளையில், விளையாட்டு மைதானத்தில் இதுபோன்ற கொண்டாட்டங்களைத் தவிர்க்க வேண்டும் என்று வேறு சிலர் கருத்து தெரிவித்தனர்.

குறிப்பாக, இந்திய அணி வீரர்கள் கொண்டாடிய விதம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள் மற்றும் வல்லுநர்கள் கேள்வி எழுப்பினர்.

அந்த வெற்றிக்குப் பிறகு இந்திய இளம் வீரர்கள் ஆக்ரோஷமாகக் கொண்டாடினர். பாகிஸ்தான் வீரர்கள் முன்னிலையிலேயே சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, இந்திய அணியின் பணியாளர்கள் வீரர்களை அமைதிப்படுத்தி மைதானத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது. சில வீரர்கள் பாகிஸ்தான் அணியினரை நோக்கியும் சைகை செய்தனர்.

வைபவ் சூர்யவன்ஷி ஏமாற்றம்
Getty Images
(கோப்புப்படம்).

இந்தப் போட்டியில் இந்திய அணி பேட்டிங் செய்ய வந்தபோது, அதிரடி ஆட்டக்காரர் வைபவ் சூர்யவன்ஷி மீதுதான் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்திருந்தனர்.

ஆனால், இந்தப் போட்டியில் அவரால் குறிப்பிடத்தக்க ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை. 13 பந்துகளைச் சந்தித்து இரண்டு பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் எடுத்த நிலையில் அவர் ஆட்டமிழந்தார்.

சமூக ஊடகங்களில் எழுந்த கருத்துகள்

கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையின்போது, டாஸ் போடுவதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவும் முறைப்படி கைகுலுக்கிக் கொள்ளவில்லை (கோப்புப்படம்).
Getty Images
கடந்த ஆண்டு துபையில் நடைபெற்ற ஆசியக் கோப்பையின்போது, டாஸ் போடுவதற்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவும் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சல்மான் ஆகாவும் முறைப்படி கைகுலுக்கிக் கொள்ளவில்லை (கோப்புப்படம்).

பாகிஸ்தான் அணியின் வெற்றி குறித்து இந்தியாவில் பலரும் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தேஜஸ் என்ற பெயரில் ஒருவர், "இரு அணி வீரர்களும் ஒருவருக்கொருவர் கைகுலுக்கிக் கொள்ளவில்லை. பாகிஸ்தான் வீரர்கள் ஒரு சாதாரண வெற்றியைக் கூட உலகக் கோப்பையை வென்றதுபோலக் கொண்டாடுகின்றனர்" என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் போட்டியில் திலக் வர்மாவின் பேட்டிங் குறித்தும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எக்ஸ் தளத்தில் அபிஷேக் யாதவ் என்பவர், "என்ன நடந்தாலும் பாகிஸ்தானிடம் தோற்றுவிடக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.

தோல்வி குறித்து கோபத்துடன் கருத்து தெரிவித்த அவர், " திலக் வர்மா அணியின் ஆட்டத்தை ஓரளவுக்குச் சீராக்கினார். இதனால், ரன்களை விட அதிகமான பந்துகளைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அனைவரும் ஆட்டமிழந்து கொண்டிருந்ததால், யாராவது ஒருவர் களத்தில் நிலைத்து நின்றிருக்க வேண்டியிருந்தது. ஹர்ஷித் ராணாவும் கோபத்தில் இருந்தார். சக வீரர்களிடமே அவர் கடுமையாக நடந்துகொண்டார். அவர் தனது கட்டுப்பாட்டை இழந்திருந்தார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வராஹ் வாரியர் என்ற பெயரில் ஒருவர், "இந்திய ரசிகர்கள் மனமுடைந்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இந்தியாவின் வெற்றியை எதிர்பார்த்திருந்த லட்சக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்துள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!