Skip to main content

Advertisement

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா எப்படி உள்ளது?

அறிவிப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் BBC-யின் RSS ஊட்டத்திலிருந்து பெறப்பட்டவை. இந்த உள்ளடக்கத்திற்கான அனைத்து உரிமைகளும் BBC-க்கு சொந்தமானவை. அசல் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா எப்படி உள்ளது?
Ramayana: Rise of a Legend, Sony Pictures

இந்தியாவில் பல தலைமுறைகளாக அறியப்படும் ராமாயணம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் மீண்டும் பெரிய திரைக்கு வந்துள்ளது.

'தங்கல்' திரைப்படத்தை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்துள்ள 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் நவம்பர் 5-ஆம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.

இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான், ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் ஆகியோர் இசையமைத்துள்ளனர்.

பெரும் பொருட்செலவு, பிரமாண்டமான காட்சிகள், முன்னணி நடிகர்கள் என அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ள இந்தப் படம் எப்படி இருக்கிறது?

ஊடக விமர்சனங்கள் என்ன சொல்கின்றன?

கதை என்ன?

சீதையை ராவணன் கடத்திச் செல்வதுடன், அவரை மீட்க ராமர் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கான அடித்தளத்தை முதல் பாகம் அமைக்கிறது
T-Series/YT
சீதையை ராவணன் கடத்திச் செல்வதுடன், அவரை மீட்க ராமர் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கான அடித்தளத்தை முதல் பாகம் அமைக்கிறது

அயோத்தி மன்னர் தசரதரின் மகனான ராமரின் வாழ்க்கையையும், இலங்கை மன்னர் ராவணனுடன் அவருக்கு ஏற்படும் மோதலுக்கான பின்னணியையும் மையமாகக் கொண்டு திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

மிதிலை இளவரசி சீதையை ராமர் திருமணம் செய்துகொள்வது, 14 ஆண்டுகள் வனவாசம் செல்வது உள்ளிட்ட நிகழ்வுகள் படத்தில் இடம்பெறுகின்றன.

ராமருடன் சீதையும் அவரது சகோதரர் லட்சுமணனும் காட்டுக்குச் செல்கின்றனர்.

மறுபுறம், ராவணனின் அதிகாரம், அவரது பின்னணி, ராமருடன் மோதல் ஏற்படுவதற்கான சூழல்கள் ஆகியவையும் விவரிக்கப்படுகின்றன.

சீதையை ராவணன் கடத்திச் செல்வதுடன், அவரை மீட்க ராமர் மேற்கொள்ளவிருக்கும் முயற்சிகளுக்கான அடித்தளத்தை முதல் பாகம் அமைக்கிறது.

ரன்பீர் கபூர், சாய் பல்லவியின் நடிப்பு எப்படி?

ராமர் கதாபாத்திரத்திற்குத் தேவையான அமைதி, பொறுப்புணர்வு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை ஆகியவற்றை ரன்பீர் கபூர் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளதாக ஊடக விமர்சனங்கள் தெரிவித்துள்ளன.
T-Series/YT
ராமர் கதாபாத்திரத்திற்குத் தேவையான அமைதி, பொறுப்புணர்வு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை ஆகியவற்றை ரன்பீர் கபூர் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளதாக ஊடக விமர்சனங்கள் தெரிவித்துள்ளன.

'அனிமல்' திரைப்படத்தில் ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் நடித்த ரன்பீர் கபூர், இந்தப் படத்தில் அதற்கு நேர்மாறான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

ராமர் கதாபாத்திரத்திற்குத் தேவையான அமைதி, பொறுப்புணர்வு, உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் தன்மை ஆகியவற்றை ரன்பீர் கபூர் நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளதாக அந்த விமர்சனம் கூறுகிறது.

ஆனால் திரைப்படத்தின் தொடக்கத்தில் ரன்பீர் கபூரின் நடிப்பு சற்று அடக்கமாகத் தோன்றுவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் தெரிவிக்கிறது.

வனவாசக் காட்சிகளுக்குப் பிறகு அவரது நடிப்பு வலுப்பெறுவதாகவும், காட்டில் அரக்கர்களுடன் மோதும் சண்டைக் காட்சிகள் குறிப்பிடத்தக்க அளவில் அமைந்துள்ளதாகவும் அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதையாக நடித்துள்ள சாய் பல்லவியின் நடிப்பும் விமர்சகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறிப்பாக, ராமர் - சீதை இடையிலான உறவு, வனவாசக் காட்சிகள், ராவணனுடன் சீதை எதிர்கொள்ளும் சூழல்கள் ஆகியவற்றில் அவரது நடிப்பு பாராட்டப்பட்டுள்ளது.

லட்சுமணனாக நடித்துள்ள ரவி துபேவும் தனது கதாபாத்திரத்திற்குப் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் குறிப்பிடுகிறது.

ராவணனாக யஷ் எப்படி நடித்துள்ளார்?

ராவணனின் அதிகாரம், ஆணவம், வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காட்சிகளில் யஷ் நடிப்பு கவனத்தை ஈர்ப்பதாகப் பல விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.
Sony Pictures Entertainment/YT
ராவணனின் அதிகாரம், ஆணவம், வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காட்சிகளில் யஷ் நடிப்பு கவனத்தை ஈர்ப்பதாகப் பல விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

'கேஜிஎஃப்' மூலம் பரவலாக அறியப்பட்ட யஷ், ராவணனாக நடித்துள்ளார்.

ராவணனின் அதிகாரம், ஆணவம், வீரம் ஆகியவற்றை வெளிப்படுத்தும் காட்சிகளில் அவரது நடிப்பு கவனத்தை ஈர்ப்பதாகப் பல விமர்சனங்கள் குறிப்பிடுகின்றன.

ராவணனின் கதாபாத்திரத்துக்கு வழங்கப்பட்டுள்ள பின்னணியும், அவரது பல்வேறு பரிமாணங்களைச் சித்தரிக்கும் விதமும் பாராட்டப்பட்டுள்ளன.

அதேநேரத்தில், ராமர் மற்றும் ராவணன் கதாபாத்திரங்களின் சித்தரிப்பில் காணப்படும் வேறுபாட்டையும் விமர்சனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

கட்டுப்பாடான ராமராக ரன்பீர் கபூர் நடிப்பை வெளிப்படுத்தும் நிலையில், ராவணனாக யஷ் அதற்கு நேர்மாறாக ஆக்ரோஷமான தோற்றத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக என்டிடிவி விமர்சனம் குறிப்பிடுகிறது.

இருவரின் நடிப்பிலும் இந்த வேறுபாடு வெளிப்பட்டாலும், திரைப்படத்தின் ஒட்டுமொத்த நடிப்புத் தரம் ஒரே மாதிரியாக இல்லை என்பது அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்துள்ள 'ராமாயணா: பாகம் 1' திரைப்படம் நவம்பர் 5 ஆம் தேதி (இன்று) வெளியாகியுள்ளது.
T-Series/YT

பிரமாண்டம் படத்திற்கு பலமா?

இந்தத் திரைப்படத்தின் காட்சியமைப்பு தொடர்பாக விமர்சகர்களிடையே பெரும்பாலும் பாராட்டுகள் காணப்படுகின்றன.

அயோத்தி அரண்மனை, இலங்கை, வனப்பகுதிகள், அரக்கர்களுடனான போர்கள் உள்ளிட்ட காட்சிகள் கணினித் தொழில்நுட்பத்தின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்தியத் திரைப்படம் ஒன்று உலகளாவிய திரைப்படங்களின் பிரமாண்டத்திற்கு இணையான காட்சியனுபவத்தை வழங்கியுள்ளதாக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனம் குறிப்பிட்டுள்ளது.

நிதேஷ் திவாரி, பிரமாண்டமான காட்சிகளை உருவாக்கியிருப்பதுடன் கதையின் உணர்ச்சிகரமான அம்சங்களுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளதாக அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் என்டிடிவி விமர்சனம் இதிலிருந்து மாறுபடுகிறது.

காட்சிப் பிரமாண்டம் படத்தின் முக்கிய பலமாக இருந்தாலும், அது கதையின் ஆழத்தையும் மனித உணர்வுகளையும் பின்னுக்குத் தள்ளுவதாக அந்த விமர்சனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமான கணினித் தொழில்நுட்பக் காட்சிகள், நீண்ட சண்டைக் காட்சிகள் ஆகியவை சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்துவதாகவும் அந்த விமர்சனம் குறிப்பிடுகிறது.

திரைப்படத்தின் காட்சியமைப்பு சிறப்பாக இருந்தாலும், ராமாயணத்தில் இடம்பெறும் அறம், மனித உறவுகள், தத்துவார்த்தமான கேள்விகள் ஆகியவற்றை ஆழமாக வெளிப்படுத்தவில்லை என்று அந்த விமர்சனம் தெரிவித்துள்ளது.

படத்தின் தொடக்கத்தில் அதிகப்படியான காட்சி பிரமாண்டம் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் தெரிவித்துள்ளது.

ஆனால் கதாபாத்திரங்களுக்கிடையிலான மோதல்கள் வலுப்பெறும்போது திரைப்படம் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துவதாக அந்த நாளிதழ் விமர்சனம் குறிப்பிடுகிறது.

ஏ.ஆர். ரகுமான் - ஹான்ஸ் ஜிம்மர் இசை எப்படி?

ஏ.ஆர். ரகுமானும் ஹான்ஸ் ஜிம்மரும் இணைந்து இசையமைத்திருப்பது திரைப்படத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்றாக உள்ளது.

பின்னணி இசை, குறிப்பாகப் பிரமாண்டமான காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் அவை தாக்கத்தை ஏற்படுத்துவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் குறிப்பிடுகிறது.

ஆனால் இசை குறித்தும் மாறுபட்ட கருத்துகள் வெளியாகியுள்ளன.

சில விமர்சகர்கள் பின்னணி இசை காட்சிகளின் தாக்கத்தை அதிகரிப்பதாகக் கூறியுள்ளனர். மற்றவர்கள், இத்தகைய காவியக் கதைக்குத் தேவையான உணர்ச்சியை இசை அனைத்து இடங்களிலும் ஏற்படுத்தவில்லை என்று விமர்சித்துள்ளனர்.

ராமாயணா திரைப்படம் எப்படி இருக்கிறது?

பல தலைமுறைகளாக அறியப்படும் ராமாயணக் காவியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் பெரிய திரையில் மீண்டும் சொல்லும் முயற்சிக்கு விமர்சகர்களிடையே மாறுபட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.
T-Series/YT
பல தலைமுறைகளாக அறியப்படும் ராமாயணக் காவியத்தை நவீன தொழில்நுட்பத்துடன் பெரிய திரையில் மீண்டும் சொல்லும் முயற்சிக்கு விமர்சகர்களிடையே மாறுபட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

திரைப்படத்தின் காட்சிப் பிரமாண்டம், நடிப்பு மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா பாராட்டுகிறது.

தொடக்கத்தில் சில குறைகள் இருந்தாலும், திரைப்படம் படிப்படியாக ஈர்ப்பை ஏற்படுத்துவதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் குறிப்பிடுகிறது.

ஆனால் என்டிடிவி, அதிகப்படியான காட்சித் தொழில்நுட்பம் காரணமாகக் கதாபாத்திரங்களின் ஆழமும் கதையின் உணர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

RAAGA Aaha Siranta Isai!