Skip to main content
ஜொகூர்வாசி, வாக்களிக்க மறவாதீர் !

 

ஜொகூர் தேர்தலில், வாக்காளர்கள் அனைவரும் நாளை தவறாமல் வாக்களிக்க வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் !

ஒவ்வொரு வாக்கும், ஜொகூரின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதாக, மலாயா பல்கலைக்கழக அரசியல் ஆய்வாளர், Dr Mohamad Tawfik Yaakub தெரிவித்துள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜொகூர் தேர்தலில், வாக்குப்பதிவு வெறும் 54.92 விழுக்காடாக மட்டுமே பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

--------

இதனிடையே, நாளைய தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களின் எண்ணிக்கை, சுமார் 70 விழுக்காட்டை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது !  

அத்தேர்தலில், 2.7 மில்லியன் பேர் வாக்களிக்கத் தகுதிப் பெற்றுள்ளனர்.

வாக்களிப்பு மையங்கள், காலை எட்டு மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 6 மணிக்கு மூடப்படும்.

அம்மாநிலத்தில், அனைத்து 56 தொகுதிகளிலும், வாக்களிப்பு நடைபெறுகிறது.

இதனிடையே, தேர்தல் முடிவுகளை, நாளை இரவு எட்டு மணி தொடங்கி, ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ராகாவில் கேட்கலாம்; Astro Audio செய்திகள் சமூக ஊடகங்களையும் வலம் வாருங்கள்.

---------

சமூகப் பாதுகாப்பு அமைப்பின் Lindung 24/7 திட்டத்தில் பங்களிக்க விரும்பாத ஊழியர்கள், வேலை நேரத்திற்கு வெளியே ஏற்படும் விபத்துகள் அல்லது உயிரிழப்புகளுக்கு, தங்கள் முதலாளி மற்றும் PERKESO பொறுப்பல்ல என்பதை உறுதிப்படுத்தும் பாரத்தை நிரப்ப வேண்டும் !

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட அத்திட்டம், ஊழியர்களின் வேலையிடத்துக்கு வெளியே இடம்பெறும் சாலை விபத்துகள் அல்லது மற்ற அசம்பாவிதங்களிலும் PERKESO பாதுகாப்பை வழங்குவதாகும்.

எனினும், இத்திட்டத்தில் இணைவது, மலேசிய தொழிலாளர்களுக்கு, இனி விருப்பத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளதால், அதிலிருந்து விலக விரும்புவோர், இந்த விலக்கு பாரத்தை நிரப்புவது கட்டாயமாகும்.

---------

மலாக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உலோகக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்தி, திடீர் சோதனைகள் நடத்தும்படி, கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது !

அங்கு பள்ளியொன்றில், மாணவர் ஒருவர், சிறிய கத்தியுடன் சக மாணவர்களைத் துரத்திய சம்பவத்தைத் தொடர்ந்து, அத்துறை அவ்வுதரவை வழங்கியது.

பள்ளிகளுக்கு, கூர்மையான ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கான தடையை கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும் என்றும், அதுகுறித்த விதிமுறைகள் குறித்து மாணவர்கள், பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு, தொடர்ந்து நினைவூட்டப்படும் என்றும் அத்துறை கூறியது.

--------

மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூர் பந்திங்கில் உள்ள பள்ளியொன்றில், கத்திக் குத்துச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 15 வயது மாணவி, ஒரு மாத காலத்துக்கு மனநல பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் !  

இவ்வார தொடக்கத்தில், சக மாணவியை கத்தியால் குத்தியதற்கு, தாம் தொடர்ச்சியாக பகடிவதைக்கு உள்ளானதால் ஏற்பட்ட மனக்கசப்பே காரணம் என, அவள் காவல்துறையிடம் கூறியிருந்தாள்.

RAAGA Aaha Siranta Isai!