Skip to main content
குடும்ப வன்முறை, சாதாரண விஷயமல்ல !

 

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுவோரைக் குறை கூறாமல், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அண்டை வீட்டினர் அவர்களுக்கு உதவ முன்வர வேண்டும் !

மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சு, அவ்வாறு கேட்டுகொண்டுள்ளது.

எனினும், அவர்களுக்கு உதவி வழங்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அமைச்சு கூறியது.

அதே வேளை, குடும்ப வன்முறையின் எந்தவோர் அறிகுறியையும் அலட்சியப்படுத்தக் கூடாது என்றும் அவ்வமைச்சு சொன்னது.

குடும்ப வன்முறை என்பது மறைத்து வைக்க வேண்டிய அல்லது தனியாக எதிர்கொள்ள வேண்டிய தனிப்பட்ட விவகாரம் அல்ல என அமைச்சு கூறியது.

ஆஸ்திரேலியாவில், பினாங்கில் பிறந்த ஒருவர், குடும்ப வன்முறை சம்பவம் எனக் கூறப்படும் நிலையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அமைச்சு அதனை கூறியது.  

---------  

இந்தோனேசியா Soekarno-Hatta அனைத்துலக விமான நிலையம் வழியாகப் பயணம் மேற்கொள்ளத் திட்டமிடும் மலேசியர்கள், தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட வேண்டும் !

சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களிடம், விமானப் பயணத்தின் நிலவரத்தை அவ்வப்போது சரிபார்க்கும்படி அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

அந்த விமான நிலையம் செப்டம்பர் 8-ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும், குறிப்பாக ஜகார்த்தாவிலிருந்து புறப்படும் விமானங்களின் அட்டவணையில், தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

இதனிடையே, விமானச் சேவை பாதிக்கப்பட்டதால், செப்டம்பர் 6 மற்றும் 7-ஆம் தேதிகளில், சிக்கித் தவிப்பதாகப் பதிவு செய்துள்ள மலேசியர்களின் நிலவரத்தை, ஜகார்த்தாவிலுள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

-----------  

18-ஆவது BRICS தலைவர்கள் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியாவுக்கு பயணமாகிறார் !

மலேசியாவின் முக்கிய வர்த்தக நாடுகளில் ஒன்றான இந்தியாவுடனான பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில், இந்தப் பயணத்தின்போது கவனம் செலுத்தப்படும்.

குறிப்பாக, வர்த்தகம், முதலீடு மற்றும் புதிய சந்தைகளில் நுழைவதற்கான வாய்ப்புகள் ஆகிய துறைகளில், இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும்.

---------  

பஹாங் MARAN-னில், பேரங்காடி ஒன்றின் கழிவறையில், ஆடவர் ஒருவரை ரகசியமாகப் படம் பிடித்ததாகக் கூறப்படும் 39 வயது அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் !

--------  

கோலாலம்பூர், கெடா, பினாங்கு உட்பட, நாட்டின் சில பகுதிகளில், இண்டு காலை 10 மணி வரை, இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது ! 

RAAGA Aaha Siranta Isai!