Skip to main content
மறைந்தார் சாலமன் பாப்பையா!

 

தமிழறிஞரும், புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலக் குறைவால் இன்று தனது 90ஆவது வயதில் காலமானார்!

 

அவரது மறைவுக்கு சூப்பர் Star Rajinikanth உள்ளிட்ட பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

பட்டிமன்ற நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த சாலமன் பாப்பையா அவர்கள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்களை நடத்தி வந்தவராவார். 

 

தமிழ் இலக்கியச் சேவைக்காக இவருக்கு 2021ம் ஆண்டு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

 

------ 

 

முன்னாள் பிரதமர் Datuk Seri Najib Razakகின் அரச மன்னிப்பு விண்ணப்பம் பின்னொரு நாள் மேற்கொள்ளப்படும் அரச மன்னிப்பு வாரிய கூட்டத்தின் போது விவாதிக்கப்படும்!

 

இன்று நடைபெற்ற 63ஆவது அரச மன்னிப்பு வாரிய கூட்டத்தில், அதனை ஒத்தி வைக்கும்  முடிவு எடுக்கப்பட்டதாக பிரதமர் துறையின் சட்ட விவகாரங்களுக்கான அமைச்சு அறிக்கை வழி தெரிவித்துள்ளது.

 

-----

 

சிலாங்கூர் சுல்தான் அறியணை அமர்ந்து 25 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அக்டோபர் 25-ஆம் தேதியை பொது விடுமுறையாக அறிவித்துள்ளது சிலாங்கூர் மாநிலம்.

அந்த தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு மறுநாள் வரும் திங்கட்கிழமை 26ஆம் தேதி அம்மாநிலத்தில் பொது விடுமுறை அனுசரிக்கப்படும்.

------ 

 

திரங்காணு Dungunநில் 19 வயது உயர்கல்வி கூட மாணவி ஒருவர் தனது பச்சிளம் குழந்தையை தனது locker பெட்டியில் மறைத்து வைத்திருந்தது அம்பலமாகியுள்ளது!

 

கழிவறையில் பிரசவத்தை முடித்த அம்மாணவி, அக்குழந்தையை நல்லடக்கம் செய்ய உதவிக் கோரியதாக பள்ளிவாசல் ஒன்று காவல் துறையை தொடர்புக் கொண்ட போது பிடிப்பார்.

 

------ 

பேராக், ஈப்போவில் இணையத்தில் வந்த முதலீட்டு விளம்பரத்தை நம்பி 66 வயதான முதியவர் ஒருவர் 15 ஆயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் பறிகொடுத்துள்ளார்.

 

RAAGA Aaha Siranta Isai!