
ஜெர்மனியில் நடைபெறும் பொது பூப்பந்து போட்டியொன்றில், தேசிய மகளிர் இரட்டையர் Ong Xin Yee-Carmen Ting, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !
அந்த ஜோடி, முதல் சுற்றில் இங்கிலாந்து இணையை வீழ்த்தினர்.
அதே வேளை, ஆடவர் இரட்டையர் Chia Wei Jie - Teo Ee Yi, முதல் சுற்று ஆட்டத்தின் பாதியிலேயே வெளியேறினர்.
இதனிடையே, இன்று, முதல் சுற்றில் ஆடவர் ஒற்றையர் Cheam June Wei, இந்திய வீரரை எதிர்கொள்கிறார்.
--------
Brighton-னுக்கு எதிரான நாளைய EFL கிண்ண ஆட்டத்தில், Manchester City-யின் 5 நட்சத்திரம் வீரர்கள் விளையாடப்போவதில்லை !
கோல் மன்னன் Erling Haaland, Elliot Anderson, Gianluigi Donnarumma, Joško Gvardiol, கேப்டன் Rúben Dias ஆகியோரே அவர்களாவர்.
வார இறுதியில் பிரிமியர் லீக் ஆட்டத்தில், நன்கு புத்துயிர் பெற்று விளையாட, அந்த முக்கிய வீரர்களுக்கு ஓய்வு வழங்க ஏதுவாக அம்முடிவு எடுக்கப்பட்டது.
----------
இதனிடையே, நாளை, Chelsea-யுடன் மோதும் ஆட்டத்தில், Liverpool-லின் Florian Wirtz, திடலில் கால் பதிப்பார் என நம்பப்படுகிறது !
வார இறுதியில் அவருக்கு சிறிய காயம் ஒன்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதே வேளை, Jeremie Frimpong, நவம்பர் வரைக்கும் விளையாடமாட்டார் என விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.