Skip to main content

Advertisement

2030 கால்பந்து திருவிழா எங்கு நடக்கும் என்பது இறுதியாகவில்லை!

 

2030 கால்பந்து திருவிழாவை Moroccoவில் நடைபெறும் எனக் கூறப்படுவதை உலக கால்பந்து அமைப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது!

அப்போட்டி எங்கு நடைபெறும் என்பது மீதான முடிவு ஏதும் இன்னும் எடுக்கப்படவில்லை என அது தெளிவுப்படுத்தியது.

2030 கால்பந்து திருவிழாவை Morocco, Spain, Portugal ஆகிய நாடுகள் ஏற்று நடத்துகின்றன.

Morocco கால்பந்து சம்மேளனம் அப்போட்டி தனது நாட்டில் நடைபெறும் என முன்னதாகக் கூறிக் கொண்டது.

------

அடுத்த மாதம் செப்பாங் அனைத்துலக பந்தையத்தளத்தில் நடைபெறும் Bahrain F1 GP பந்தையத்திற்கான ஆயத்த வேலைகள் 80 விழுக்காடு நிறைவு பெற்றுள்ளன!

கடந்த திங்கட்கிழமை முதலே மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் வேலைகள் நிர்ணயிக்கப்பட்ட கால வரிசையைப் பின்பற்றியே நடைபெறுகின்றன என, இளைஞர் விளையாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

-----

2026 பாரா சுக்மா போட்டியின் ஒட்டுமொத்த வெற்றியாளராக பெயர் சூடியுள்ளது சிலாங்கூர்!

அப்போட்டியில் மொத்தமாக 93 தங்கப் பதக்கங்களை அம்மாநிலம் வாங்கிக் குவித்தது.

கடந்த மாதம் நடைபெற்ற க்மா போட்டியிலும் சிலாங்கூரே வெற்றிப் பெற்றது.

பாரா சுக்மாவில் இரண்டாம் இடத்தை சபாவும், மூன்றாம் இடத்தை சரவாக்கும் பிடித்தன.

இதனிடையே 2028 சுக்மா போட்டியை கிளாந்தான் ஏற்று நடத்தும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

RAAGA Aaha Siranta Isai!