
தேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun, உலகத் தர வரிசையில், மூன்றிடங்கள் முன்னேறியுள்ளனர் !
வார இறுதியில் நடந்து முடிந்த France பொது பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில், சக நாட்டு ஜோடியான Goh Sze Fei-Nur Izzuddin-னை வீழ்த்தி, வெற்றிப் பெற்றதை அடுத்து, Wei Chong - Kai Wun, மூன்றிடங்கள் முன்னேறி, எட்டாவது இடத்தில் உள்ளனர்.
அப்போட்டியில், ஆடவர் இரட்டையர் பிரிவில், மலேசியா 22 ஆண்டுகளுகாக வெற்றி மகுடத்துக்காக காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வேளையில், மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah, தங்களது 4-ஆவது இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளனர்.
France பொது பூப்பந்து போட்டி இறுதிச் சுற்றில், சீன இணையிடம் தோல்வியுற்று, 2-ஆம் நிலை வெற்றியாளர்களான கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing, ஏழிடங்கள் முன்னேறினர்.
---------
இன்று ஜெர்மனியில் தொடங்கும் பொது பூப்பந்து போட்டியொன்றில், 3 தேசிய பிரதிநிதிகள், முதல் சுற்றில் களமிறங்குகின்றனர் !
ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King, உபசரணை நாட்டு ஜோடியைச் சந்திக்கின்றனர்.
மகளிர் இரட்டையர் Ong Xin Yee - Carmen Ting, இங்கிலாந்து இணையுடன் மோதுகின்றனர்.
----------
2026 பாரா ஆசிய விளையாட்டுப் போட்டியில், காயங்களால் வலியை அனுபவித்தபோதும், நாட்டுக்காகப் போட்டியிட்ட மலேசிய வீரர்களின் தியாகம் தம்மைக் கவர்ந்ததாக, இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் !
தேசிய அணி, 6 தங்கப் பதக்க இலக்கை எட்டியிருப்பது பெருமையளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், பெரும் தியாகங்களும் சவால்களும் இருப்பதாகக் கூறினார்.
அப்போட்டி நடந்த நாடான ஜப்பானில் இருந்தபோது, காயங்கள் மற்றும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும், நாட்டுக்காக வெற்றிகளைப் பெற வீரர்கள் போராடியதை, தாம் நேரில் கண்டதாகவும் அவர் சொன்னார்.