
ஆசிய விளையாட்டுப் போட்டியில், தங்கம் வெல்லும் கராத்தே வீரர்களுக்கு, காரொன்று பரிசாக வழங்கப்படும் என மலேசிய கராத்தே சம்மேளனம் தெரிவித்தது.
அந்தப் பரிசு, ஆசியாவின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவில், நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்லும் இலக்கை நோக்கி, வீரர்கள் முழு மூச்சுடன் செயல்பட ஊக்கமாக அமையும் என, அச்சம்மேளனம் கூறியது.
இம்முறை கராத்தே அணியில், ஏழு வீரர்கள் அப்போட்டிக்குச் செல்கின்றனர்.
எனவே, குறைந்தது ஒரு தங்கப் பதக்கத்தையாவது வெல்ல MAKAF இலக்குக் கொண்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், மலேசிய கராத்தே அணி, ஒரு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்று, ஒட்டுமொத்தமாக நான்காவது இடத்தைப் பிடித்தது.
ஜப்பானில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டி, செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
---------
இதனிடையே, ஆசிய விளையாட்டுப் போட்டியில், தங்கப் பதக்கம் வெல்லும் தனது ஒவ்வொரு வீரர் மற்றும் பயிற்றுநருக்கும், 4 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள அடுக்குமாடி வீடு வழங்கப்படும் என, மலேசிய கூடைப்பந்து சங்கம் அறிவித்துள்ளது !
அதே சமயம், அந்த கரோடு சேர்த்து, ஒவ்வொரு வீரருக்கும் 50 ஆயிரம் ரிங்கிட்டும், பயிற்றுநருக்கு 1 லட்சம் ரிங்கிட்டும் வழங்கப்படும்.
---------
மற்றொரு பக்கம், முதுகுக் காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்டதாக, மகளிர் இரட்டையர் நட்சத்திர வீராங்கனையான Pearly Tan தெரிவித்துள்ளார் !
நேரம் தமக்கு சாதகமாக இல்லாவிட்டாலும், ஆசிய விளையாட்டுப் போட்டியில் எம். தினாவுடன் இணைந்து பதக்கம் வெல்ல, முழு முயற்சியுடன் போராடப் போவதாக, அவர் உறுதியாகக் கூறினார்.
ஆசிய விளையாட்டுப் போட்டியின் விரிவான நேரடி ஒளிபரப்பை, Astro Arena, Stadium Astro மற்றும் மேலும் ஐந்து சிறப்பு அலைவரிசைகளில் கண்டு களிக்கலாம் ; Astro Go-வில் பார்க்கலாம்.
--------
Sabah FK-க்கு எதிரான நாளைய Champions லீக் ஆட்டத்தில், Manchester United-டின் சில முக்கிய வீரர்கள் களமிறங்குவது சந்தேகமே !
Manuel Ugarte, Matthijs de Ligt உள்ளிட்டோர், காயப் பிரச்சனையில் இருக்கின்றனர்.
அதே வேளை, காயத்தால் ஓய்வில் இருந்த Marcus Rashford, Luke Shaw ஆகியோர் மீண்டு வந்துள்ளனர்.
Manchester United - Sabah FK மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 820-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.