Skip to main content

Advertisement

Argentina - Egypt மோதல் !

 

 

2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகளைக் காண்போம் !

இந்த தொடர், இதுவரை கணிக்க முடியாத வகையில் அமைந்துள்ளதாகவும், பாரம்பரியமாக ஆதிக்கம் செலுத்தும் கால்பந்து அணிகளால், தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட முடியவில்லை என்றும் Argentina பயிற்றுநர் Lionel Scaloni தெரிவித்துள்ளார் !

Germany மற்றும் Brazil, ஆரம்பத்திலேயே வெளியேறியதையும், தமதணி கடைசி 32 அணிகளுக்கான் ஆட்டத்தில், Cape Verde-டை வீழ்த்த, கூடுதல் நேரம் தேவைப்பட்டதையும், அவர் சுட்டிக்காட்டினார்.

அதிக பயணங்கள், கடும் வெப்பநிலை, அரங்கத்தின் தரம், வீரர்களின் உடல் சோர்வு உள்ளிட்டவையே, அதற்குக் காரணங்களாக இருக்கலாம் என்றும் Scaloni கூறினார்.

----------

இதனிடையே, அர்ஜென்டினா இன்று நள்ளிரவு, கடைசி 16 அணிகளுக்கான ஆட்டத்தில், எகிப்தை எதிர்கொள்கிறது.

Cape Verde-டுக்கு எதிராக 120 நிமிடங்கள் முழுமையாக விளையாடியிருந்தாலும், Lionel Messi முதலணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், சிறிய தொடைத் தசை காயத்தால் அவதிப்பட்டு வரும் போதிலும், Mohamed Salah எகிப்துக்காக களமிறங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

----------

இப்போட்டியில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து, தனது எதிர்காலம் குறித்து அவசரப்படாமல் முடிவு எடுக்கப் போவதாக, அதன் பயிற்றுநர் Mauricio Pochettino தெரிவித்துள்ளார் !

கடைசி 16 அணிகள் மோதும் ஆட்டத்தில், பெல்ஜியமிடம் 1-4 என வீழ்ந்ததை அடுத்து, அவர் அவ்வாறு சொன்னார்.

அதே வேளை, Pochettino-வுடன் ஒப்பந்தத்தை நீட்டிக்க அமெரிக்க அணி ஆர்வம் காட்டி வரும் நிலையில், ஐரோப்பியாவின் பல முன்னணி கிளப்புகளும் அவர் மீது கண் வைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

---------

வார இறுதியில், Spain-னுக்கு எதிரான காலிறுதியாட்டத்தில், Belgium-மின் Amadou Onana களமிறங்குவது சந்தேகமே !

அமெரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தின் போது, அவருக்கு கடுமையான காயம் ஏற்பட்டதே அதற்குக் காரணம்.

--------

இதனிடையே, இப்போட்டியில் இருந்து Paraguay வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, France வீரர் Kylian Mbappé-வை, இனரீதியாக அவமதித்ததாகக் கூறப்படும் அந்நாட்டு செனட்டர் ஒருவரின் கருத்துக்களுக்கு, பராகுவே அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது !

RAAGA Aaha Siranta Isai!