
இவ்வாண்டுக்கான ஆடவருக்கான Ballon d'Or விருதை Bayern Munich நட்சத்திரம் Harry Kane வென்றுள்ளார்!
25 ஆண்டுகளில் அப்பட்டத்தை வென்ற முதல் இங்கிலாந்து வீரர் என்ற பெருமை அவரைச் சேருகிறது.
இங்கிலாந்து அணி கேப்டனான Kane, 2025-26 பருவத்தில் தமது கிளப்புக்காகவும், அனைத்துலக ஆட்டங்களுக்காகவும் 73 கோல்கள் போட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு முதல் Bayern-னுக்காக 158 ஆட்டங்களில் அவர் 153 கோல்களைப் போட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
----
இதனிடையே இவ்வாண்டுக்கான சிறந்த இளம் கால்பந்து வீரர் விருதை வென்றுள்ளார் Barcelona நட்சத்திரம் Lamine Yamal!
இது அந்த 19 வயது வீரர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக வாங்கும் பட்டமாகும்.
2023ஆம் ஆண்டு Barcaவில் இணைந்தது முதலே Yamal, மூன்று La Liga பட்டங்களையும், ஒரு copa del rey பட்டத்தையும், Spain-னுடன் 2026 கால்பந்து திருவிழாவையும் வென்ற பெருமையையும் பெறுகிறார்.
-----
மற்றொரு பக்கம் இவ்வாண்டுக்கான சிறந்த ஆடவர் கால்பந்து அணியின் Ballon D'or பயிற்றுனருக்கான விருதை Luis de la Fuente தட்டிச் சென்றுள்ளார்!
அவரது தலைமையில் தான் Spain 2026 கால்பந்து திருவிழா, 2024 யூரோ, 2023 Nations லீக் ஆகிய பட்டங்களை வாங்கிக் குவித்தது.