
2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகள் !
Spain-னுக்கு எதிராக நாளை காலிறுதியாட்டத்தில், விளையாடும் தமதணிக்கு அழுத்தம் ஏதுமில்லை இல்லை என்கிறார், Belgium பயிற்றுநர் Rudi Garcia !
பெரும்பாலானோர் ஸ்பெயின் அணியே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் என எதிர்பார்ப்பதால், Belgium பின்தங்கிய அணியாகக் கருதப்படுவதாக அவர் கூறினார்.
என்றாலும், திடீர் வெற்றிப் பெற்று அதிர்ச்சி கொடுக்கும் திறன் தமதணிக்கு உண்டு என நம்பிக்கை தெரிவித்த Garcia, நடப்பில் இருக்கும் இப்போட்டியில், France மற்றும் Argentina-வுக்கு அடுத்தபடியாக, அதிக கோல்களைப் பெற்றுள்ள மூன்றாவது அணியாக Belgium இருப்பதையும் சுட்டிக்காட்டினார்.
----------
இதனிடையே, Belgium-முக்கு எதிராக Spain விளையாடவுள்ளதை அடுத்து, அதன் நட்சத்திரம் Lamine Yamal-லின் சிறந்த ஆட்டம் இன்னும் வெளிவரவில்லை என, பயிற்றுநர் தெரிவித்துள்ளார் !
ஈராண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஐரோப்பிய கிண்ணத்தை Spain வெல்ல, Yamal முக்கிய பங்காற்றியதாகக் கூறினார்.
எனினும், Lionel Mess, Kylian Mbappe, Erling Haaland போன்ற முன்னணி வீரர்கள் கோல்களை குவித்து வரும் நிலையில், இந்த திருவிழாவில், Yamal இதுவரை தனது முழுத் திறமையை வெளிப்படுத்தவில்லை என அவர் சொன்னார்.
---------
France நட்சத்திரம் Kylian Mbappe, அரையிறுதியாட்டத்துக்குள் குணமடைந்துவிடுவார் என, அவ்வணியின் தலைமை பயிற்றுநர் தெரிவித்துள்ளார் !
மொரொக்கோவுடனான இன்றைய ஆட்டத்தின் போது, அவர் சொற்ப காயத்துக்கு இலக்காகினார்.
--------
இப்போட்டியில் இருந்து, போர்ச்சுகல் வெளியேறியதைத் தொடர்ந்து, இணையவழி கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்ட கேப்டன் Bruno Fernandes, தனது சமூக ஊடகப் பதிவுகளுக்கான கருத்துப் பதிவுகளை குறைத்துக்கொண்டுள்ளார் !
---------
மெக்சிகோவுக்கு எதிரான கடைசி 16 அணிகளுக்கான ஆட்டத்தில், சிவப்பு அட்டை பெற்றதைத் தொடர்ந்து, இங்கிலாந்து தற்காப்பு வீரர் Jarell Quansah-வுக்கு இரண்டு ஆட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது !