Skip to main content

Advertisement

Champions லீக் வெற்றி பயண எண்ணத்தில் Liverpool !

 

Champions லீக் ஆட்டத்தில், இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ள Liverpool, அந்த வெற்றிப் பயணத்தைத் தொடரும் முனைப்பிலேயே, நாளையும் Fenerbahce-வை சந்திக்கிறது !

ஆயினும், குதிகால் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக, லிவர்பூல் வீரர் Ryan Gravenberch அவ்வாட்டத்தில், களமிறக்கப்படமாட்டார்.

இதனிடையே, Fenerbahce மண்ணில் அவ்வாட்டம் நடைபெறுவதால், தமதணி வீரர்கள் மனதளவில் தைரியமாக இருந்து, களத்தில் இறங்க வேண்டும் என, Liverpool நிர்வாகி Andoni Iraola வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை மணி 1.45 தொடங்கி, Astro அலைவரிசை 820-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

---------

Man United கேப்டன் Bruno Fernandes-சை ஒப்பந்தம் செய்யும் ஆர்வத்தை, சவுதி அரேபியாவின் al-Hilal கைவிட்டுள்ளதாக, புதிய தகவல் கிடைத்துள்ளது !

இப்பருவத்தின் தொடக்கத்தில், Fernandes-சை ஒப்பந்தம் செய்வதற்கான முயற்சியில் al-Hilal நெருங்கியிருந்ததாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த ஆர்வம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

--------

ஆர்சனல் கேப்டன் Martin Odegaard-டின் எதிர்காலம் குறித்த நிலைமை தொடர்ந்து நிச்சயமற்றதாக உள்ள நிலையில், அவரது நிலைமையை Bayern Munich, உன்னிப்பாகக் கவனித்து வருவதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !

--------

கொரிய பொது பூப்பந்து போட்டியில், தேசிய கலப்பு இரட்டையர் ஜோடிகள் Hoo Pang Ron-Lai Pei Jing மற்றும் Chen Tang Jie-Chan Wen Tse, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர் !

--------

தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Datuk Mohd Azizulhasni Awang, 2028 ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு, தொடர்ந்து பயணித்து வருகிறார் !

கடந்த கால ஏமாற்றங்களுக்குப் பதிலடி கொடுப்பது தனது இலக்கு அல்ல என்றும், விளையாட்டு வாழ்க்கையைச் சிறந்த முறையில் நிறைவு செய்து, தனது பெயரை வரலாற்றில் நிலைநாட்டுவதே நோக்கம் என்றும் அவர் கூறினார்.

RAAGA Aaha Siranta Isai!