Skip to main content

Advertisement

EPL புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறிய ஆர்செனல் !

Man சிட்டியின் தோல்வியைச் சாதகமாக்கிக் கொண்ட ஆர்செனல், இங்கிலீஷ் பிரீமியர் லீக் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது !

இன்று அதிகாலை ஆட்டத்தில், Gunners லிவர்பூலை அதன் சொந்த அரங்கில் 1-0 என வீழ்த்தியது.

ஆட்டத்தின் முற்பாதியில் மத்திய திடல் வீரர் Kai Havertz போட்ட ஒரு கோலே, ஆர்சனலின் வெற்றியை உறுதி செய்தது.

2012-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கில் லிவர்பூல் மண்ணில் ஆர்சனல் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, லிவர்பூல் தற்போது 9 புள்ளிகள் பின்தங்கி ஐந்தாவது இடத்தில் உள்ளது.

கடந்த வார இறுதியில், Brighton உடனான ஆட்டத்தில் சிட்டி 0-1 என வீழ்ந்தது.

--

ஸ்பெயின் லா லிகா கால்பந்தாட்டத்தில் ரியல் மட்ரிட் , Real Racing Santander ஐ 3-0 என வீழ்த்தியது.

--

மலேசிய Super லீக் சூப்பர் கால்பந்தாட்டத்தில், சிலாங்கூர் Star City ஐ 1-0 என வீழ்த்தி, இப்பருவத்தில் தனது ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

மற்றொரு ஆட்டத்தில், மலாக்கா பினாங்கை 2-1 என தோற்கடித்தது.

--

ஆசிய சாம்பியன்ஸ் கிண்ண ஹாக்கிப் போட்டியின் நான்காவது ஆட்டத்தில், இந்தியாவிடம் தேசிய ஆடவர் ஹாக்கி அணி 2-4 என தோல்வி கண்டது.

என்றாலும், அரையிறுதிக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுள்ள மலேசியா, புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இந்தியா முதலிடத்தில் உள்ளது.

--

2026-ஆம் ஆண்டுக்கான F1 உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார், இத்தாலியைச் சேர்ந்த Mercedes ஓட்டுநர் KIMI ANTONELLI !

21 வயதே ஆன அவர் F1 வரலாற்றில் மிக இளம் வயதில் உலக வெற்றியாளர் பட்டம் வென்றவராகவும் வலம் வருகிறார்.

 

RAAGA Aaha Siranta Isai!