
2026 காற்பந்து திருவிழாவின் காலிறுதியாட்டங்கள், நாளை தொடங்குகின்றன !
அதில், France மற்றும் Morocco மோதும் ஆட்டம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Morocco-வின் தாக்குதல் வீரர் Ismael Saibari, கனடாவுக்கு எதிரான கடைசி 16 அணிகள் மோதும் ஆட்டத்தின் போது காயமடைந்ததால், அவர் நாளை விளையாட மாட்டார்.
மற்றொரு பக்க, France, மீண்டும் தனது நட்சத்திர வீரர் Kylian Mbappe-வை பெரிதும் நம்பியுள்ளது.
அவர், தற்போது நடைபெற்று வரும் இப்போட்டியில், 7 கோல்கள் அடித்துள்ளதுடன், தங்கக் காலணி விருதுக்கான முன்னணி போட்டியாளராகவும் உள்ளார்.
----------
இதனிடையே, எகிப்து தேசிய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்றுநர் Hossam Hassan-னின் ஒப்பந்தத்தை நீட்டிக்க, அந்நாட்டின் கால்பந்து நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது !
அவ்வணி, இப்போட்டியில் கடைசி 16 அணிகள் மோதும் சுற்று வரை முன்னேறி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை அடுத்து, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
----------
Newcastle United-டின் 𝐁𝐑𝐔𝐍𝐎 𝐆𝐔𝐈𝐌𝐀𝐑𝐀𝐄𝐒-சை ஒப்பந்தம் செய்ய, ஆர்செனல் அதிகாரப்பூர்வ விண்ணப்பம் அனுப்பவுள்ளதாகக் கூறப்படுகிறது !
அந்த மத்திய திடல் வீரர், Newcastle-லை விட்டு வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுவதை கேள்விப்பட்ட ஆர்செனல், அவரை தமதணியில் சேர்க்க, தீவிரமாக உள்ளது.