Skip to main content

Advertisement

Harimau Malaya பயிற்றுநர் யாரென்று விரைவில் தெரியும் !

 

2030 கால்பந்து திருவிழா மற்றும் 2032-ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத் தகுதிச் சுற்றுப் போட்டிகளில் பங்கேற்க, Harimau Malaya தயாராகி வருகிறது !

அதனால், தேசிய அணியின் புதிய தலைமைப் பயிற்றுநர் டிசம்பர் தொடக்கத்தில் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுவதாக, மலேசியக் கால்பந்து சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார்.

பல பயிற்றுநர்களின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இறுதி முடிவு, தேசிய அணியின் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என அவர் கூறினார்.

இதனிடையே, இடைக்காலப் பயிற்றுநர் Tan Cheng Hoe-வின் ஒப்பந்தம் நவம்பர் 25-ஆம் தேதி வரை நீடிக்கிறது.

அவரது தலைமையில், மலேசிய அணி, நவம்பர் 14 மற்றும் 17-ஆம் தேதிகளில் சீனாவுக்கு எதிரான நட்புறவுப் ஆட்டங்களில் விளையாடும்.

---------

ஜெர்மனியில் நடைபெறும் பொது பூப்பந்து போட்டியொன்றில், ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King, இன்று 2-ஆம் சுற்றில் களமிறங்குகின்றனர் !

அவர்கள், இந்தோனேசிய ஜோடியுடன் மோதுகின்றனர்.

அந்த பொது பூப்பந்து போட்டியை, இப்போது தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில், நேரலையாகக் காணலாம்.

---------

Santos கிளப்பின் நட்சத்திரம் Neymar-ருக்கு, ஈராட்டங்களில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது !

வார இறுதியில் Serie A காற்பந்தாட்டத்தின் போது, எதிரணி வீரருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, Neymar-ருக்கு சிவப்பு அட்டை வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

RAAGA Aaha Siranta Isai!