
ஜெர்மனியில் நடைபெறும் பொது பூப்பந்து போட்டியொன்றில், நேற்று விளையாடிய தேசிய பிரதிநிதிகளில் 2 ஜோடி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !
ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King, கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing ஆகியோரே அவர்களாவர்.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia, ஜப்பானிய வீரரிடம் தோற்றார்.
மகளிர் இரட்டையர் Ong Xin Yee - Carmen Ting-கும், அடுத்து சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை நழுவவிட்டனர்.
அந்த பொது பூப்பந்து போட்டியை, இன்றிரவு 8 மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.
-------
ACL 2 கால்பந்தாட்டத்தில், Kuching City 0-1 என தென்கொரியாவின் Gangwon-னிடம் தோல்வியடைந்தது !
--------
EFL கிண்ண ஆட்டத்தில் கடைசி வரை Manchester City-க்கு நெருக்கடி கொடுத்த Brighton, நாளைய பிரீமியர் லீக் ஆட்டத்திலும், சவால் அளிக்கத் தயாராகி வருகிறது !
நேற்றைய நான்காவது சுற்று ஆட்டத்தில், அவ்விரு அணிகளும் தலா 2 கோல்கள் அடித்து, ஆட்டத்தை சமநிலையில் முடித்தன.
பின்னர், பெனால்டியில் வெற்றி பெற்று, City காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள பிரீமியர் லீக் ஆட்டத்தில், அந்த இரு அணிகளும் தங்களின் முழுப் பலத்துடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Brighton-னிடமிருந்து மீண்டும் கடுமையான போட்டியை தமதணி எதிர்பார்க்கலாம் என, சிட்டி நிர்வாகி Enzo Maresca-வும் கூறினார்.
---------
இன்று காலை நடைபெற்ற EFL கிண்ண காற்பந்தாட்ட 4-ஆம் சுற்று ஆட்டத்தில், Everton, 3-1 என Newcastle United-டை வீழ்த்தி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது !