
இங்கிலாந்து அணியின் கேப்டன் Harry Kane-னை, அந்நாட்டின் சிறந்த வீரர் என பாராட்டியுள்ளார், Jude Bellingham !
செக் குடியரசுக்கு எதிரான Nations லீக் கால்பந்தாட்டத்தில், இங்கிலாந்துக்கான 2 கோல்கள் Kane அடித்தவையாகும்.
இந்த ஆட்டம், இங்கிலாந்துக்காக Kane விளையாடிய 125-ஆவது ஆட்டமாகும்.
இதையடுத்து, முன்னாள் கோல் காவலர் Peter Shilton- னின் சாதனையை, Kane சமப்படுத்தினார்.
அதுமட்டுமில்லாமல், அவர், அதிக அனைத்துலக போட்டிகளில் விளையாடிய இங்கிலாந்து வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
இங்கிலாந்துக்காக அவர் அடித்த அனைத்துலக கோல்களின் எண்ணிக்கை, 91-ஆக உயர்ந்துள்ளது.
---------
21 ஆண்டுகால அனைத்துலக கால்பந்து பயணத்துக்குப் பிறகு, ரசிகர்கள் மற்றும் சக வீரர்களுக்கு Lionel Messi நன்றி தெரிவித்துள்ளார் !
Benin-க்கு எதிரான இன்றைய நட்புமுறை ஆட்டம், அர்ஜெந்தினாவுக்காக, Messi விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்தது.
அனைத்துலக கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவது, தனது விளையாட்டு வாழ்க்கையின் மிகவும் சோகமானதொன்று என 39 வயதான Messi கூறினார்.
அண்மைய போட்டிகளில் ஏற்பட்ட உடல் மற்றும் மனச் சோர்வு காரணமாக, ஓய்வு பெற இதுவே சரியான நேரம் என அவர் குறிப்பிட்டார்.
--------
Brazil இளம் வீரர் Endrick-கை, Aston Villa, இரவல் அடிப்படையில் ஒப்பந்தம் செய்யத் தயாராகி வருகிறது !
20 வயதான Endrick, தற்போது விளையாடி வரும் Real Madrid-டின் தலைமைப் பயிற்றுநர் José Mourinho-வை கவரத் தவறியதைத் தொடர்ந்து, இந்த முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.