Skip to main content

Advertisement

Kobbie Mainoo நாளை விளையாடலாம் !

 

Chelsea-சுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Manchester United-டின் Kobbie Mainoo களமிறங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது !

காயம் காரணமாக கடந்த நான்கு ஆட்டங்களில் விளையாடாத அவர், இவ்வார தொடக்கத்தில் மீண்டும் பயிற்சிக்குத் திரும்பியுள்ளார்.

இதனிடையே, Bournemouth-துக்கு எதிரான அண்மைய தோல்வி கண்ட பிரிமியர் லீக் ஆட்டத்தில், மாற்று வீரராக அமர்த்தப்பட்ட யுனைடட் கேப்டன் Bruno Fernandes, நாளை முதலணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மையில் United-டின் ஆட்ட யுத்திகளை விமர்சித்த Fernandes, தொடர்ந்து கேப்டன் பொறுப்பிலே நீடிப்பார் என அதன் பயிற்றுநர் Michael Carrick தெரிவித்துள்ளார்.

அவ்விருவருக்கும் இடையே நிலவிய கருத்து வேறுபாடுகளைக் களையும் வகையில், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகவும் Carrick சொன்னார்.

--------

இதனிடையே, முன்னாள் Liverpool நட்சத்திரம் Trent Alexander-Arnold-டை ஒப்பந்தம் செய்ய, Chelsea பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன !

தற்போது Real Madrid-டில் தொடர்ந்து முதலணியில் விளையாட வாய்ப்புக் கிடைக்காத நிலையில், 28 வயதான அந்த தற்காப்பு ஆட்டக்காரர் தனது எதிர்காலம் குறித்து ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

--------

Lionel Messi-யைப் பின்னுக்குத் தள்ளி, Ballon d'Or வரலாற்றின் மிகச் சிறந்த வெற்றியாளர் விருது வென்ற வீரராகத் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, Cristiano Ronaldo, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் !

--------

ஜெர்மனியில் நடைபெறும் பொது பூப்பந்து போட்டியொன்றில், 2 தேசிய பிரதிநிதிகளான, ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King, கலப்பு இரட்டையர் Hoo Pang Ron - Lai Pei Jing ஆகியோர், இன்று காலிறுதியில் களமிறங்குகின்றனர் !

அந்த பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இரவு 8 மணி தொடங்கி, Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.  

---------

2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கான முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து, தேசிய உள்ளரங்கு சைக்கிளோட்ட வீரர் Datuk Mohd Azizulhasni Awang-குடன், இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் Dr Mohammed Taufiq Johari கலந்துரையாடியுள்ளார் !

RAAGA Aaha Siranta Isai!