Skip to main content

Advertisement

மகிழ்ச்சியில் திளைக்கும் Argentina !

 

2026 காற்பந்து திருவிழா குறித்த செய்திகள்  

அர்ஜென்டினா, காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது தனக்கு பெருத்த மகிழ்ச்சி என்கிறார், அதன் ஜாம்பவான் Lionel Messi !

அதுவும், இன்று கடைசி 16 அணிகளுக்கான ஆட்டத்தில், கடைசி நிமிடம் வரை கடும் போட்டியைக் கொடுத்து வந்த எகிப்தை வீழ்த்தி வெற்றிப் பெற்றது, மிகவும் கடினமான தருணமாக இருந்ததாகவும் Messi கூறினார்.

காற்பந்து திருவிழாவில் ஒவ்வோர் ஆட்டமும் இப்படித்தான் இருக்கும் எனக் கூறிய அந்த கேப்டன், எந்த அணியையும் குறைத்து மதிப்பிட்டுவிடவே கூடாது, என்றார்.

இந்நிலையில், கடைசி 16 அணிகளுக்கான ஆட்டத்தின் பிற்பாதியில், Christian Romero, Lionel Messi, Enzo Fernandes ஆகியோர், அர்ஜென்டினாவுக்காக தலா ஒரு கோல் போட்டு, ஆட்டத்தை வெற்றியில் முடித்தனர்.  

----------

பெல்ஜியமின் Amadou Onana, எஞ்சியுள்ள ஆட்டங்களைத் தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளதாம் !

அமெரிக்காவுக்கு எதிரான கடைசி 16 அணிகள் மோதும் ஆட்டத்தின் போது, அவருக்கு கடுமையாக அடிபட்டதே அதற்குக் காரணம்.

வார இறுதியில் நடைபெறும் காலிறுதியாட்டத்தில், பெல்ஜியம், Spain-னுடன் மோதுகிறது.

----------

Atlético Madrid-டின் Julian Alvarez, Barcelona-வில் இணைய வேண்டும் என்ற தனது விருப்பத்தை, அதன் மத்தியதிடலாட்டக்காரர் Gavi தெரிவித்துள்ளார் !

Alvarez-சை ஒப்பந்தம் செய்ய Arsenal-லும் ஆர்வம் காட்டி வருகின்றதாம்.

----------

Real Madrid-டின் முன்னாள் பயிற்றுநர் Alvaro Arbeloa, Fulham-மின் புதிய நிர்வாகியாக நியமிக்கப்பட்டுள்ளார் !

அவ்வணியுடன் அவர் மூன்றாண்டுகால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 

RAAGA Aaha Siranta Isai!