
2026-ஆம் ஆண்டு மலேசிய Grand Prix பந்தயத்துக்கு, 52 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன !
அது, COVID-19 பெருந்தொற்றுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச விற்பனை எண்ணிக்கை என, Sepang அனைத்துலக பந்தயத்தளம் தெரிவித்துள்ளது.
விற்பனைக்காக ஒதுக்கப்பட்ட 56 ஆயிரம் டிக்கெட்டுகளில், 52 ஆயிரம், விற்பனையாகியுள்ளன.
இதனிடையே, அப்பந்தயத்தைக் காண வந்த பார்வையாளர்களின் மொத்த எண்ணிக்கை, சுமார் ஒரு லட்சத்து 96 ஆயிரத்தை எட்டியதாகவும் அது கூறியது.
அது, ஏற்பாட்டாளர்கள் நிர்ணயித்த 2 லட்சம் பார்வையாளர்கள் எனும் இலக்கை நெருங்கியுள்ளதாகவும், அடுத்தாண்டு அந்த இலக்கை எட்ட முயற்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்பந்தயத்தில், Spain-னைச் சேர்ந்த Ducati ஓட்டுநர் Marc Marquez, வெற்றியாளர் பட்டத்தை வாகை சூடினார்.
---------
அமெரிக்க பொது Squash போட்டியில், தேசிய தாரகை S.சிவசங்கரி, சகநாட்டு வீராங்கனை, Aifa Azman-னை வீழ்த்தி, 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !
அடுத்தச் சுற்றில், சிவசங்கரி எகிப்து வீராங்கனையுடன் மோதுகிறார்.
இதற்கு முன்பு அந்த எகிப்து வீராங்கனையை நான்கு முறை சந்தித்துள்ள Sivasangari, அந்த நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.
--------
Manchester United-டுக்கு, Premier லீக்கில் இருந்து வெளியேறும் அபாயம் இருப்பதாக, அதன் முன்னாள் நிர்வாகி Erik ten Hag கூறுகிறார் !
Premier League-இல் மற்ற அணிகள் இன்னும் வலுவாக இருப்பதால், யுனைடட்டுக்கு அந்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக அவர் சொன்னார்.
வார இறுதியில், Chelsea-யிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, United, புள்ளிப் பட்டியலில் 17-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டது.