Skip to main content

Advertisement

Man City-யை தொடர்ந்து ஆதரவளியுங்கள் !

 

பிரிமியர் லீக் நிதி விதிமீறல் தொடர்பான தீர்ப்பை எதிர்கொண்டுள்ள Manchester City-டுக்கு ஆதரவாக, ரசிகர்கள் தொடர்ந்து இருக்க வேண்டும் என Erling Haaland வலியுறுத்தியுள்ளார் !

தீர்ப்பு வெளியான பின்னர், முதலில் கருத்து தெரிவித்த Haaland, தங்களால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைக் குறித்துக் கவலைப்படாமல், ஒவ்வோர் ஆட்டத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என, அணியினரையும் ரசிகர்களையும் கேட்டுக்கொண்டார்.

City-க்கு எதிராக, தரமிறக்கம் உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் எனும் அச்சம் நிலவுகிறது.

அதனால், அணியின் நட்சத்திர வீரர்கள் வெளியேறக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, Haaland சிட்டியில் இருந்து வெளியேறுவது குறித்து எதுவும் தெரிவிக்காத நிலையில், அவரை Barcelona, உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறப்படுகிறது.

---------

Napoli மத்தியதிடலாட்டக்காரர் Scott McTominay, தனது ஒப்பந்த நிபந்தனைகளில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அவரை Real Madrid, கண்காணித்து வருவதாக, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன !

--------

Formula 1 Bahrain Grand Prix பந்தயத்தின் தொடக்கத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு தொடர்பில், மின் சக்தி அலகின் மென்பொருள் முறையாகச் சோதிக்கப்படவில்லை என கூறப்படுவதை, அனைத்துலக மோட்டார் வாகன சம்மேளனம் மறுத்துள்ளது !

பந்தயத்துக்கு முன்பே, அந்த அந்த மென்பொருள், விரிவான உருவகப்படுத்தல் சோதனைகளுக்கும், பந்தயத் தட மதிப்பீடுகளுக்கும் உட்படுத்தப்பட்டதாக, FIA தெரிவித்தது.

---------

Arctic பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia-வும், ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King-கும், காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

--------

ஆசியான் கிளப் காற்பந்தாட்டத்தில், JDT, கம்போடிய அணியான PKR Svay Rieng அணியை, 6-0 என வீழ்த்தி வெற்றிப் பெற்றது !

---------

17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான ஆசிய கிண்ண காற்பந்தாட்ட, E குழு தகுதிச் சுற்று ஆட்டத்தில், தேசிய அணி 4-0 என ஈராக்கை வீழ்த்தி வெற்றிப் பெற்றது ! 

RAAGA Aaha Siranta Isai!