Skip to main content

Advertisement

மன உறுதியில் MU பயிற்றுநர் Carrick !

 

Roma-வுக்கு எதிரான நாளைய Champions லீக் ஆட்டத்தில், Manchester United-டின் Patrick Dorgu களமிறக்கப்படமாட்டார் !

காயப் பிரச்சனையால் ஓய்வில் இருந்து, அவர் இடைபட்ட காலமே பயிற்சிக்கு திரும்பியுள்ளார்.

அதனால், அவரை நாளையே ஆட்டத்தில் களமிறக்குவது சரியான முடிவாக இருக்காது என, யுனைடட் தலைமை பயிற்றுநர் Michael Carrick கூறினார்.

Luke Shaw-வும் காயம் காரணமாக நாளை விளையாடப்போவதில்லை.

---------

இதனிடையே, தொடர் தோல்விகளால் தடுமாறி வரும் Manchester United, Roma-வுக்கு எதிரான நாளைய ஆட்டத்தின் வழி, மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பும் முனைப்பில் உள்ளதாக, Michael Carrick கூறுகிறார் !

தொடர்ந்து 9 ஆட்டங்களில் வெற்றி பெறாதது, தமதணிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், நாளைய ஆட்டம், யுனைடட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும் என தாம் எதிர்பார்ப்பதாக சொன்னார்.

---------

இன்று அதிகாலையில் நடைபெற்று முடிந்த பிரிமியர் லீக் ஆட்டத்தில், Newcastle United மண்ணில் விளையாடிய Everton, 1-0 என வெற்றிக்கொண்டுள்ளது !  

கடந்த வாரம் நடந்த EFL கிண்ண ஆட்டத்திலும், Everton, Newcastle-லை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

---------

2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஆடவருக்கான கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில், இந்தியா - பாகிஸ்தான் மோதும் குழுநிலை ஆட்டத்தைக் காண, சுமார் 84 லட்சம் டிக்கெட் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன !

அவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம், அடுத்தாண்டு அக்டோபர் 10-ஆம் தேதி, நடைபெறவுள்ளது.

--------

கொரிய பொது பூப்பந்து போட்டியில், ஆடவர் இரட்டையர் Man Wei Chong - Tee Kai Wun உள்ளிட்ட சில தேசிய பிரதிநிதிகள், இன்று தங்களின் பயணத்தைத் தொடங்குகின்றனர் !

கொரிய பொது பூப்பந்து போட்டி, இன்று தொடங்கி, நவம்பர் 8-ஆம் தேதி வரை நடைபெறும்.

---------

அமெரிக்க பொது Squash போட்டியில், தேசிய தாரகை S.சிவசங்கரி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் !

RAAGA Aaha Siranta Isai!