Skip to main content

Advertisement

நாளை சில முக்கிய வீரர்களை இழக்கும் MU !

 

Sporting Lisbon-னுக்கு எதிரான நாளைய Champions லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில், Manchester United, சில முக்கிய வீரர்களை இழக்கும் !

Carlos Baleba, Manuel Ugarte, Marcus Rashford, Benjamin Šeško தான் அவர்களாவர்.

அவர்கள், காயப் பிரச்சனையில் அவதியுற்று வருவதே அதற்குக் காரணம்.

Sporting - Manchester United மோதும் ஆட்டத்தை, அதிகாலை 4 மணிக்கு, Astro அலைவரிசை 821 மற்றும் Sooka-வில் நேரலையாகக் காணலாம்.

---------

இதனிடையே, கடந்த Champions லீக் ஆட்டத்தில் பெற்ற தோல்வியில் இருந்து மீண்டு வரும் முனைப்போடு, நாளை Club Brugge-வுடனான ஆட்டத்தில் களம் காண்கிறது Liverpool !

எனினும், அவ்வாட்டத்தில் லிவர்பூலின் Cody Gakpo, Ryan Gravenberch உள்ளிட்டோர், காயம் காரணமாக விளையாடமாட்டார்கள்.

Club Brugge - Liverpool மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 4 மணி தொடங்கி, Astro அலைவரிசை 822-டிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

--------

இவ்வேளையில், இன்று காலை PSV-யுடனான 5-1 என வெற்றி கண்ட ஆட்டத்தில் Jude Bellingham வெளிப்படுத்திய சிறந்த ஆட்டத்தை, Real Madrid தலைமை பயிற்றுநர் பாராட்டியுள்ளார் !

பிற்பாதியில் களமிறங்கிய அவர், தொலைவிலிருந்து அசத்தலான கோல் ஒன்றை அடித்து அசத்தியதே அதற்குக் காரணம்.

RAAGA Aaha Siranta Isai!