
அர்ஜெண்டினாவிடம் 2-3 என தோற்ற 2026 கால்பந்து knockout ஆட்டத்தின் நடுவர் குழுவை விசாரணைக்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொண்டுள்ளது எகிப்து கால்பந்து சம்மேளனம்!
சர்ச்சைக்குரிய அவ்வாட்டத்தின் போது நடுவர்களால் சில தவறுகள் செய்யப்பட்டதாகவும், நடுவர் ஒருதலை பட்சமாக நடந்துக் கொண்டதாகவும் கூறி அச்சம்மேளனம் ஏற்பாட்டுக் குழுவிடம் புகாரை முன்வைத்துள்ளது.
நேற்றைய அந்த பரபரப்பான ஆட்டத்தில், எகிப்து போட்ட கோல் வீடியோ நடுவர் தொழில்நுட்பத்தால் நிராகரிக்கப்பட்டது.
பின்னர் அடுத்தடுத்து அவ்வணி இரு கோல்களைப் போட்டு முன்னிலையில் இருந்தாலும், அதன் பெனால்டி வாய்ப்பும் பறிக்கப்பட்டது தொடர்பில் எகிப்து கடும் அதிருப்தி தெரிவித்தது.
பிற்பாதி வரை பின்தங்கியிருந்த அர்ஜெண்டினா கடைசி 11 நிமிடங்களில் மூன்று கோல்களைப் போட்டு காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பைப் பெற்றது.
-----
நான்காண்டுகால ஒப்பந்தத்தில் போர்ச்சுகலின் புதிய நிர்வாகியாகப் பொறுப்பேற்கவிருக்கின்றார் Jorge Jesus!
Roberto Martinezசின் இடத்தை அவர் நிரப்பும் தகவலை அணி நிர்வாகம் இவ்வாரம் அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Jesusசின் தலைமையில் போர்ச்சுகல் யூரோ 2028 மற்றும் 2030 கால்பந்து திருவிழாவில் பங்கேற்கும்.
-----
இதனிடையே Mexico தேசிய அணி நிர்வாகியாக Barcelona சகாப்தம் Rafael Marquez அறிவிக்கப்பட்டுள்ளார்!
2026 கால்பந்து திருவிழாவின் knockout ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியதை அடுத்து, அவ்வணி நிர்வாகி பொறுப்பிலிருந்து Javier Aguirre விலகினார்.