சுற்றுச்சூழல் துறையின் ஆகக் கடைசி தகவல் படி, நாட்டில் பெரும்பாலான இடங்களைப் புகைமூட்டம் பாதித்துள்ளது !
கோலாலும்பூர், ஜொகூர், நெகெரி செம்பிலான், புத்ராஜெயா, மலாக்கா, கெடா , பினாங்கு ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளை உள்ளடக்கி 38 இடங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற அளவில் இருக்கிறது.
ஆக அதிகமாக, ஜொகூர் சிகாமாட்டில் API குறியீடு 189 ஐ எட்டியுள்ளது.
--
இதனிடையே, ஜொகூரில் நிலவும் கடுமையான புகைமூட்டம் காரணமாக Senai விமான நிலையத்தில் குறைந்தது 5 விமானங்கள் தரையிறங்க முடியாமல் போனது!
பார்வைத்திறன் குறைந்ததால், பாதுகாப்புக் காரணங்களுக்காகச் சில விமானங்கள் KLIA மற்றும் சிங்கப்பூர் Changi விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.
மேலும், செனாய் விமான நிலையத்திலிருந்து இன்னும் கிளம்பாத விமானங்களின் அட்டவணைகளும் தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு கூறியது.
--
நெகிரி செம்பிலான், குவாலா பீலாவில், இரு வாரங்களுக்கு முன்பு, விளையாட்டு பள்ளி ஒன்றில் 14 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்தச் சம்பவம் தொடர்பில், 16 வயதுடைய இரு மாணவர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
இருவரும் குற்றத்தை ஒப்புக்கொள்ளாத நிலையில், வழக்கு மீண்டும் டிசம்பர் 7ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
--
KESAS நெடுஞ்சாலையில் உத்தரவை மீறி காவல் துறையின் வாகன அணிவகுப்பைப் பின்தொடர்ந்து சென்ற 27, வயதான SUV வாகன ஓட்டுனருக்கு நான்காயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
--
இந்தி திரையுலகின் மூத்த நடிகர்களில் ஒருவரான Nana Patekar , தனது 75-வது வயதில் மாரடைப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
அவர் அக்னி சாட்சி, காலா, பொம்மலாட்டம் ஆகிய தமிழ் திரைப்படங்களிலும் நடித்தவரார்.