Skip to main content

Advertisement

புதுத்தெம்புடன் விளையாடும் Arsenal !

 

 

Sunderland-டுக்கு எதிரான நாளைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், Arsenal புதுத்தெம்பு பெற்று விளையாடலாம் !

உடற்தகுதி குன்றியிருந்த கவலைபட்டுக் கொண்ட ஆர்செனலின் Ben White-டும், Cristhian Mosquera-வும், நாளை திடலில் களமிறக்கப்படுவதே அதற்குக் காரணம்.

அதே வேளை, முக்கிய வீரர்களான Jurrien Timber-ரும், William Saliba-வும், காயம் காரணமாக விளையாடமாட்டார்கள்.

பருவம் தொடங்கி 3 ஆட்டங்களிலும், ஆர்செனல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Sunderland  - Arsenal மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, அதிகாலை 3 மணி தொடங்கி, Astro அலைவரிசை 812-டிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

---------

இன்றிரவு மேலும் சில பிரிமியர் லீக் ஆட்டங்களும் உள்ளன !

Liverpool - Fulham-முடன் மோதுகிறது.

அவ்வாட்டத்தை, இரவு 10 மணி தொடங்கி, Astro அலைவரிசை 811 மற்றும் Sooka-வில் நேரகையாகக் காணலாம்.

அதே வேளை, Chelsea - Hull City மோதும் ஆட்டத்தை, இரவு 10 மணிக்கு, அலைவரிசை 812-டில் பார்க்கலாம்.

Aston Villa-வும், Nottingham Forest-டும் மோதிக்கொள்ளும் வேளை, Crystal Palace-சும், Ipswich Town-னும், நேருக்கு நேர் சந்திக்கின்றன.

---------

இளையோருக்கான 2026 ஆசிய ஹாக்கி கிண்ண போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறும் தேசிய அணியின் கனவு, நனவாகவில்லை !

அரையிறுதி ஆட்டத்தில், அவ்வணி, இந்திய அணியிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

RAAGA Aaha Siranta Isai!