
தற்போது நிலவும் புகைமூட்டம் காரணமாக, நாளை புக்கிட் ஜலீலில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது !
வெளிப்புற நடவடிக்கைகளுக்குப் பாதுகாப்பான அளவுக்கு புகைமூட்டம் தாக்கம் குறைந்ததும், புதிய தேதி அறிவிக்கப்படும் என இளைஞர், விளையாட்டுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கோலாலம்பூர், சிலாங்கூர், ஜொகூர், கெடா, பினாங்கு, நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களில் நடைபெறவிருந்த மாநில அளவிலான கொண்டாட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பஹாங், திரெங்கானு, கிளந்தான், பெர்லிஸ், பேராக், சபா, சரவாக், லாபுவான் ஆகிய இடங்களில், திட்டமிட்டபடி கொண்டாட்டங்கள் நடைபெறும் என்றும் அமைச்சு கூறியது.
---------
மலேசிய பூப்பந்து ஆடவர் இரட்டையர் வீரர் Tee Kai Wun, அடுத்த வாரம் Man Wei Chong-குடன் மீண்டும் இணைந்து விளையாடத் தொடங்கியதும், உலகத் தரவரிசையில், முதல் 10 இடங்களுக்குள் விரைவாக முன்னேற இலக்கு கொண்டுள்ளார் !
ஆசிய விளையாட்டுப் போட்டியில், Kai Wun, Aaron Chia-வுடன் இணைந்து விளையாடியதைத் தொடர்ந்து, Wei Chong - Kai Wun ஜோடி, உலகத் தரவரிசையில் 12-ஆவது இடத்துக்குச் சரிந்தது.
---------
Michael Olise, Liverpool-லுடன் இணைந்து விளையாடக்கூடும் எனும் தகவல்கள் வெளியாகியுள்ளதை அறிந்த Bayern Munich, அவருக்கு நீண்டகால ஒப்பந்தத்தை வழங்கி, தக்கவைத்துக்கொள்ள தயாராக உள்ளதாம் !