
Chelseaயை 2-0 என வீழ்த்திய EPL ஆட்டத்தில் தமதணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதாகக் கூறி பெருமைப்பட்டுக் கொண்டார் Tottenham நிர்வாகி Roberto De Zerbi!
இப்பருவத்தை எதிர்ப்பார்த்த படி தொடக்காத Tottenham, அடுத்தடுத்து வெற்றிகளை வாங்கிக் குவிக்கிறது.
இதே வெற்றிப் பயணம் தொடரும் என தாம் எதிர்ப்பார்ப்பதாக Zerbi, Stadiumastroவிடம் தெரிவித்தார்.
மற்ற Premier லீக் ஆட்டங்களில்,
Aston Villa 2-1 என Man Cityயைத் தோற்கடித்தது.
Arsenal, 2-0 என Everton-நை வென்றது.
Fulham, 1-0 என Coventryயை வென்றது.
--
பயிற்சியின் போது மயங்கி விழுந்த நிர்வாகி Vincent Kompany தற்போது சுய நினைவோடு இருப்பதை Bayern Munich உறுதிப்படுத்தியிருக்கிறது.
வைரஸ் தொற்றால் அவதியுற்று வரும் Kompany, அடுத்த சில வாரங்களுக்கு ஓய்வில் வைக்கப்படுவார் என, அந்த ஜெர்மனிய கிளப் தெரிவித்தது.
--
இன்று நான்கு மலேசிய பிரதிநிதிகள் France பொது பூப்பந்து போட்டியின் இறுதிச் சுற்றில் களமிறங்குகின்றனர்!
மகளிர் இரட்டையர் Pearly Tan- M Thinaah, Hoo Pang Ron-Lai Pei Jing, ஆடவர் இரட்டையர் Goh Sze Fei-Nr Izzuddin, Man Wei Chong-Tee Kai Wun ஆகிய ஜோடிகளே அவை.
France பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை இன்று மாலை 6 மணி தொடங்கி, Astro Badminton அலைவரிசை 815 மற்றும் சூக்காவில் காணலாம்.