Man United நிர்வாகி பொறுப்புக்குத் தாவ எண்ணமில்லை!
அவ்வாறு கூறியுள்ளார் Aston Villa நிர்வாகி Unai Emery.
நிர்வாகி Micheal Carrickகை நீக்கும் முடிவு எடுக்கப்பட்டால், அவரை அணி நிர்வாகம் அணுகலாம என்ற ஆருடங்கள் பரவி வருகின்றன.
எனினும் Emery அதில் ஈடுபாடு காட்டவில்லை என்றும், இப்போதைக்கு Villaவில் தனது பணியில் அவர் தீவிரம் காட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
பருவ தொடக்கத்திலிருந்தே மிளிர போராடி வரும் United நேற்று Bournemoutவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-3 என தோற்று, ரசிகர்கள் கடும் அதிருப்தியில் ஆழ்த்தியிருக்கிறது.
--
மற்றொரு பக்கம், Crystal Palaceசும் Unitedடின் நிலையில் தான் இருக்கிறது!
நிர்வாகி Pierre Sageஜை நீக்கும் முடிவில் அணி தலைவர்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
Burnley முன்னாள் நிர்வாகி Sean Dyche, Brentford முன்னாள் நிர்வாகி Thomas Frank, Tottenham முன்னாள் வீரர் Robbie Keane ஆகியோர் பரிசீலனை பட்டியலில் இருப்பதாகத் தெரிகிறது.
--
தேசிய Squash தாரகை S சிவசங்கரி தனது கவனத்தை பெரிய அளவிலான போட்டிகளில் செலுத்த திட்டமிட்டுள்ளார்!
இவ்வாரம் Silicon Valley பொது squash போட்டியில் வாகை சூடிய அவர், தனது இலக்கை மேலும் உயர்வுக்குக் கொண்டுச் செல்லவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.