Skip to main content

Advertisement

விளையாட்டுக்கு 757 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு !

 

2027 வரவு செலவு திட்டத்தில், விளையாட்டுத் துறை திட்டங்களுக்காக, 757 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது !

அதில் பெரும்பகுதி, விளையாட்டுத் துறை மேம்பாட்டிற்காகச் செலவிடப்படும்.

இதற்காக 460 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அதே வேளை, அடுத்தாண்டு மலேசியா ஏற்று நடத்தவுள்ள சீ விளையாட்டுப் போட்டி, மற்றும் ஆசியான் பாரா விளையாட்டுப் போட்டிக்காக, 240 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

மற்றொரு பக்கம், பள்ளி விளையாட்டு நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீடு, 50 விழுக்காடு அதிகரிக்கப்பட்டு, 27 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் வழி, நாடு முழுவதும் உள்ள 10 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த, 46 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைவர்.

----------

Arctic பொது பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் ஒற்றையர் Lee Zii Jia-வும், ஆடவர் இரட்டையர் Aaron Tai - Yap Roy King-கும், அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர் !

காலிறுதியில், Zii Jia, பிரஞ்சு வீரர் Christo Popov-வை வீழ்த்திய வேளை,  Aaron -  Roy King, தாய்லாந்து ஜோடியை தோற்கடித்தனர்.

இன்று அரையிறுதியில் Zii Jia, டென்மார்க் வீரரான Anders
ANTONSEN-னைச் சந்திக்கின்றார்.

Aaron - Roy King-கும் டென்மார்க் நாட்டை சேர்ந்த இணையுடன் மோதுகின்றனர்.

Arctic பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதியாட்டங்களை, மாலை 4 மணி தொடங்கி, Astro அலைவரிசை 815 மற்றும் Sooka-வில், நேரலையாகக் காணலாம்.  

---------

Leeds United-டுக்கு எதிரான இன்றைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், ஆர்செனல், தனது முக்கிய வீரர்களான Kai Havertz, Ezri Konsa ஆகியோரை இழக்கலாம் !

காயம் காரணமாக, அவர்களின் உடற்தகுதி குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

அதே வேளை, William Saliba, இன்று விளையாடப் போவதில்லை என்பது உறுதியாகியது.

ஆர்செனல் - Leeds United மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.

RAAGA Aaha Siranta Isai!