
Man Unitedடின் இப்பருவ தொடக்கம் அவ்வளவு ஒன்றும் மோசமாக இல்லை!
Evertonனுடனான நேற்றைய EPL ஆட்டத்தில் 2-2 என சமநிலை கண்டதை அடுத்து, தமதணியை அவ்வாறு தற்காத்துப் பேசியிருக்கிறார் நிர்வாகி Micheal Carrick.
Unitedடின் ஒவ்வொரு கோலுக்கும் பதிலடியாக Everton ஒரு கோல் போட்டுக் கொண்டே இருந்தது.
அவ்வாட்டத்தில் தமதணியின் வெற்றி நூலிழையில் தவறியதே தவிர, கால்பந்தாட்டங்களில் இம்மாதிரியான எதிர்ப்பாரா தருணங்கள் மிகவும் இயல்பானவை என Carrick கூறியிருக்கிறார்.
புதிய பருவம் தொடங்கி மூன்று ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், United ஒரு வெற்றி, ஒரு தோல்வி, ஒரு சமநிலையைப் பதிவுச் செய்திருக்கிறது.
-----
இதனிடையே மற்றோர் ஆட்டத்தில் நடப்பு வெற்றியாளரான Arsenal 2-1 என Chelseaயை வீழ்த்தியது!
சொந்த அரங்கில் விளையாடிய அவ்வாட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே Chelseaயிடமிருந்து ஒரு கோலை வாங்கிக் கொண்டது Arsenal.
பின்னர் Kai Havertz அதனை சமப்படுத்த, பிற்பாதியில் Martin Odergard, Gunnersசுக்கான வெற்றி கோலை போட்டார்.
-----
20 வயதுக்குக் கீழ்ப்பட்ட ஆசிய கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறது மலேசியா!
Harimau Malaya கடைசி குழு நிலை ஆட்டத்தில் Laosசை 2-1 என வீழ்த்தியது.
-----
இத்தாலிய F1 GP பந்தையத்தில், Mercedes ஓட்டுனர் Kimi Antonelli வாகை சூடினார்.
George Russelலையும் Max Verstappenநையும் பின்னுக்குத் தள்ளி அவர் முதலிடத்தைப் பிடித்தார்.