Skip to main content
தீபாவளியை முன்னிட்டு 12 ஆயிரம் கூடுதல் ரயில் இருக்கைகள்!

 

தீபாவளி பெருநாளை முன்னிட்டு கிட்டத்தட்ட 12 ஆயிரம் கூடுதல் ரயில் இருக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது KTMB நிறுவனம்.

நவம்பர் 5 முதல் 9 வரை, Padang Besar- KL Sentral இடையே இரண்டு கூடுதல் ETS ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அதே போல் JB Sentral- KL Sentral இடையிலான பயணத்திற்கு நவம்பர் 6 முதல் 9 வரை கூடுதல் ETS சேவைகள் வழங்கப்படும்.

பெருநாள் சமயத்தில் நீண்ட வார இறுதி விடுமுறை சிறப்பாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதை இது இலகுவாக்கும் என அந்நிறுவனம் நம்புகிறது.

-----

குற்றச் செயல்களுக்காக வழிபாட்டுத் தளங்களைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதை சிலாங்கூர் மாநில அரசு என்றும் ஏற்றுக் கொள்ளாது!

எந்த இனம், மதம், பின்னணியாக இருந்தாலும் இவ்விவகாரத்தில் விட்டுக் கொடுக்கும் போக்கு காட்டப்படாது என, மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் V பாப்பாராய்டு திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

அண்மையில் கிள்ளானில் பதிவுச் செய்யப்படாத வழிபாட்டுத் தளம் ஒன்றில், போதை பொருள் ஒளித்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுவது குறித்து அவர் பேசினார்.

-----

பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே வசிக்கும் மாணவர்கள், தங்களின் தங்குமிட விவரங்களை பல்கலைக்கழகங்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது அவசியம் என உயர்கல்வி அமைச்சு அறிவுறுத்துகிறது.

பல்கலைக்கழகங்கள் அவர்களின் நலனைக் கண்காணி அது அவசியம் என்பதை அவ்வமைச்சு சுட்டிக் காட்டியது.

----

கெடா Kubang Pasuவில் வெறிநாய்க்கடி தொற்று ரேபிஸ் இல்லை!

நூற்றுக்கும் மேற்பட்ட பிராணிகளை சோதனையிட்டதில் அது உறுதியாகியிருப்பதாக கால்நடை சேவை துறை தெரிவித்தது.

RAAGA Aaha Siranta Isai!