
2027-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி பயின்ற பட்டதாரிகளுக்கு சாதகமான அறிவிப்பு இடம்பெறலாம் !
மனிதவள அமைச்சர் Datuk Seri R. Ramanan அவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும், அது தொடர்பான அறிவிப்பை பிரதமர் Datuk Seri Anwar Ibrahim வெளியிடுவார் என்பதால், கூடுதல் விவரங்களைத் தெரிவிக்க Ramanan மறுத்துவிட்டார்.
2027 வரவு செலவு அறிக்கை, அக்டோபர் 9-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, TVET துறையில் அதிக திறன் கொண்ட தொழிலாளர்களின் சம்பளம் தற்போது 16 ஆயிரம் ரிங்கிட் வரை உயர்ந்துள்ளதாகவும், முன்பு அது சுமார் 12 ஆயிரம் ரிங்கிட்டாக இருந்ததாகவும் Ramanan கூறினார்.
TVET பட்டதாரிகளுக்கான தொழில்துறையின் அங்கீகாரம் அதிகரித்து வருவதையும், திறமையான தொழிலாளர்கள் அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் உருவாகி வருவதையும் இது காட்டுவதாக, அவர் தெரிவித்தார்.
--------
மலாக்கா சட்டமன்றம் கலைக்கப்படுவதாக, மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார் !
16-ஆவது சட்டமன்ற தேர்தலுக்கு வழிவிடும் வகையில், நாளை அது நடப்புக்கு வருகிறது.
சட்டமன்றம் கலைக்கப்பட்ட நாளில் இருந்து 60 நாட்களுக்குள், தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும்.
அவ்வகையில், மலாக்கா சட்டமன்ற தேர்தலுக்கான தேதிகளை முடிவுச் செய்ய, தேர்தல் ஆணையம் விரைவில் கூட்டம் நடத்தும் என எதிர்பாரக்கப்படுகிறது.
--------
2018-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடக நிகழ்ச்சியில், தேசிய கோட்பாட்டை கேலி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அடையாளம் காணப்பட்ட ஐந்து நடிகர்களில், மூவரை, காவல்துறை கைது செய்துள்ளது !
சுமார் மூன்று நாட்களுக்கு முன்னர், சிலாங்கூர் மற்றும் ஜொகூரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக Bukit Aman தெரிவித்தது.
பின்னர், அம்மூவரும் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
---------
நாடளவில் நடத்தப்பட்ட சோதனையில், சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான பதிவுகளை வைத்திருந்ததாக, 13 முதல் 18 வயதுக்குட்பட்ட எட்டு சிறார்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் !
13 முதல் 18 வயதுக்குட்பட்ட அந்தச் சிறார்கள், செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட சிறார் பாலியல் வன்கொடுமை தொடர்பான பதிவுகளை வைத்திருந்து விற்பனை செய்தது தொடர்பில் விசாரிக்கப்படுகின்றனர்.
--------
மாலை 5 மணி வாக்கில், ஜொகூர் Batu Pahat-டில் 4.4 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது !
எனினும், அப்பகுதியில் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக, முவார் மாவட்ட காவல்துறை Astro Audio செய்திப் பிரிவிடம் தெரிவித்தது.