
பிரிமியர் லீக் புள்ளிப்பட்டியலில், லிவர்பூல் முதல் 4 இடங்களுக்குள் முன்னேறியுள்ளது !
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில், அவ்வணி, Crystal Palace-சை 3-1 என வீழ்த்தி வெற்றிப் பெற்றதே அதற்குக் காரணம்.
லிவர்பூலுக்காக, Alexis Mac Allister, Florian Wirtz, Alexander Isak ஆகியோர் தலா ஒரு கோலை போட்டனர்.
கூடுதல் நேரத்தின் போது, பெனால்டி வாய்ப்பைப் பயன்படுத்தி Palace, ஒரு கோலை அடித்தது.
இதையடுத்து, ஐந்தாவது இடத்தில் உள்ள Chelsea-யை விட லிவர்பூல் 2 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
---------
இதனிடையே, Aston Villa-வுக்கு எதிரான ஆட்டத்தில், Patrick Dorgu அடித்த கடைசி நேர கோலால், Manchester United, 4-4 என ஆட்டத்தை சமநிலைபடுத்தி, தோல்வியின் விளிம்பிலிருந்து தப்பியது !
ஆயினும், அம்முடிவு யுனைடெட்டை, 2-ஆவது டிவிஷனுக்குத் தள்ளப்படுவதில் இருந்து காப்பாற்ற போதுமானதாக இல்லை.
அவ்வணி, புள்ளிப் பட்டியலில், கடைசிக்கு மூன்றாவது இடத்தில் உள்ளது,
---------
இவ்வேளையில், யுனைடட்டின் நிர்வாகி Michael Carrick-கோ, ஆட்டத்தின் இரு பாதிகளின் தொடக்கத்திலும் எளிதில் கோல்களை கோட்டைவீட்ட தற்காப்பு ஆட்டக்காரர்கள் குறித்து, அதிருப்தி தெரிவித்துள்ளார் !
இதுவரை 10 ஆட்டங்களில் 19 கோல்களைக் கோட்டைவிட்டுள்ள யுனைடெட், பிரிமியர் லீக்கில் நான்காவது மோசமான தற்காப்புப் பதிவைக் கொண்டுள்ளது.