ஜப்பான் மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில், தேசிய ஆடவர் இரட்டையர் Aaron Tai Yap Roy King வரலாற்று மிக்க சாதனையைப் படைத்துள்ளனர் !
இறுதிச்சுற்றில், ஜப்பான் வீரர்களை வீழ்த்திய அவர்கள், அத்தொடரில் ஆடவர் இரட்டையர் பட்டம் வென்ற முதல் மலேசியர்கள் எனும் பெருமையைப் பெற்றுள்ளனர்.
புதிதாக இணைந்த அவ்விணைக்கு இது இரண்டாவது வெற்றியாகும்.
கடந்த மாதத்தில், அவ்விணை ஆர்டிக் பொது பூப்பந்து போட்டியில் வெற்றிக் கண்டது.
மேலும், இதுவரை அவ்விணை பங்கேற்ற ஐந்து போட்டிகளில், மூன்றில் அரையிறுதி சுற்று வரை முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.
--
ஆசிய Tenpin Bowling சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் Tun Ameerul Luqman Al Hakim வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
--
ஹாங்காங் அனைத்துலக கிளாசிக் Lawn பவுல்ஸ் போட்டியில், மலேசியாவின் 18 ஆண்டுகால வறட்சி முடிவுக்கு வந்துள்ளது.
அப்போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் Nor Zamziezah Ahmad -Nur Ain Nabilah இணை பட்டம் வென்றுச் சாதனையைப் படைத்துள்ளது.
--
தேர்ந்தெடுக்கப்பட்ட Nations லீக் முடிவுகள்
இங்கிலாந்து 3-2 உலக சாம்பியனான Spain-ஐ வென்றது.
France Turkiy வை 2-1 என வீழ்த்தியது.
Belgium, Italy ஐ 4-1 தோற்கடித்தது.