
Everton-னுக்கு எதிரான இன்றைய பிரிமியர் லீக் ஆட்டத்தில், ஆர்செனல், 2 முக்கிய வீரர்களை இழக்கும் !
William Saliba மற்றும் Bukayo Saka தான் அவர்களாவர்.
அவர்கள் காயப் பிரச்சனையில் இருப்பதே அதற்குக் காரணம்.
Saka, அண்மைய Champions League ஆட்டத்தில் காயமடைந்தார்.
அதனால் அவர் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு ஓய்வில் செல்கிறார்.
அதே வேளை, Piero Hincapie, இன்று விளையாடுவதற்கான உடற்தகுதியைக் கொண்டுள்ளார்.
ஆனாலும், அவர் முதல் அணியில் களமிறங்குவதற்கான வாய்ப்பு குறைவே என, விளையாட்டு வட்டாரங்கள் கூறுகின்றன.
Arsenal - Everton மோதும் ஆட்டத்தை, இன்றிரவு 10 மணி தொடங்கி, Astro அலைவரிசை 812 மற்றும் Sooka-வில் நேரலையாகப் பார்க்கலாம்.
---------
இதனிடையே, Aston Villa-வுக்கு எதிரான ஆட்டத்தில், Manchester City-யின் Antoine Semenyo விளையாடமாட்டார் என கூறப்படுகிறது !
காயம் காரணமாக, அவர் குறுகிய காலத்துக்கு ஓய்வில் இருப்பாராம்.
Aston Villa - Manchester City மோதும் ஆட்டத்தின் நேரடி ஒளிபரப்பை, இன்றிரவு மணி 7.30 முதல், Astro அலைவரிசை 811-றிலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.
---------
Silicon Valley பொது Squash போட்டியின் அரையிறுதியில், தேசிய தாரகை S.சிவசங்கரி, இந்திய வீராங்கனை Anahat Singh-கை தோற்கடித்து, இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார் !
கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதிச் சுற்றில், சிவசங்கரி, அந்த இந்திய வீராங்கனையை வீழ்த்தி, தங்கப் பதக்கத்தை தக்கவைத்துக் கொண்டார்.
----------
France பொது பூப்பந்து போட்டியின் அரையிறுதியில், ஆடவர் இரட்டையர் Goh Sze Fei - Nur Izzuddin, மகளிர் இரட்டையர் Pearly Tan - M.Thinaah உள்ளிட்ட 4 தேசிய பிரதிநிதிகள் இன்று களம் காண்கின்றனர் !
France பொது பூப்பந்து போட்டியின் நேரடி ஒளிபரப்பை, இன்று பிற்பகல் மணி 3.30 முதல், Astro அலைவரிசை 815-திலும், Sooka-விலும் கண்டு களிக்கலாம்.