
2027 சீ விளையாட்டுப் போட்டிக்கென அதிகாரப்பூர்வ அகப்பக்கம் இன்றை அறிமுகப்படுத்துகிறது இளைஞர் விளையாட்டு அமைச்சு!
சீ விளையாட்டுப் போட்டி மற்றும் பாரா ஆசியான் விளையாட்டுப் போட்டியின் உபசரணை நாடாக தனது ஆயத்த வேலைகளை வலுப்படுத்தும் மலேசியாவின் முயற்சிகளில் ஒன்றாக அது அமைகிறது.
அவ்வகப்பக்கம் கட்டங்கட்டமாக உருவாக்கப்படும்.
ஆட்ட அட்டவணை, இடம், அண்மைய நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் அதில் அவ்வப்போது சேர்க்கப்படும் என அவ்வமைச்சு கூறியது.
-----
இதனிடையே 2027 சீ விளையாட்டுப் போட்டியிலிருந்து இந்தோனேசியா விலகிக் கொள்ளவிருப்பதாகக் கூறப்படுவதை இளைஞர் விளையாட்டு அமைச்சு மறுத்துள்ளது!
சில விளையாட்டுப் பிரிவுகள் அப்போட்டியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து இந்தோனேசியா அம்முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை என அது கூறியது.
பிரிவுகள் குறித்த முடிவு சீ விளையாட்டுப் போட்டியின் கூட்டமைப்பு மற்றும் உறுப்பு நாடுகளுடனான கலந்துரையாடல்களுக்குப் பிறகே எடுக்கப்படும் என அது விளக்கியது.
-----
ஆடவர் இரட்டையர் Man Wei Chong-Tee Kai Wun கலப்பு இரட்டையர் Goh Soon Huat-Shevon Lai உள்ளிட்ட நாட்டின் எட்டு பிரதிநிதிகள் இன்று ஜப்பானிய மாஸ்டர்ஸ் பூப்பந்து போட்டியில் களமிறங்குகின்றனர்.
நேற்று மகளிர் இரட்டையர் Pearly Tan- M Thinaah முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறினர்.
அனைத்து ஆகக் கடைசி விளையாட்டுச் செய்திகளை, Stadiumastro.comமில் இன்றே தெரிந்துக் கொள்ளுங்கள்.